சென்னை: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகமான டிஎன்டிஆர்சி(TNDRC) மாநிலத்தின் நான்கு முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரிங் ரோடு வசதியை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக டிடி நெக்ஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும். காற்று மாசை தடுக்கவும், தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் திருப்பூர், திருநெல்வேலி ,கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய நான்கு நகரங்களிலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் ரிங் ரோடுகளை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக கன்சல்டன்ட் நிறுவனங்களை நாடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திருநெல்வேலி ,திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய நான்கு நகரங்களுமே மேம்படுத்தப்பட்ட சாலை மற்றும் ரயில் இணைப்புகளை கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதிகளுக்கென பிரத்தியேக பைபாஸ் சாலைகள் இல்லாததே இதற்கு காரணம். இந்த சூழலில் தான் ரிங் ரோடுகளை கட்டமைத்து இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூரை பொறுத்தவரை தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி சந்தையாக திகழ்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி அதிகம் நடைபெறும் ஒரு பகுதி என்பதால் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 381 ,மாநில நெடுஞ்சாலை 196, மாநில நெடுஞ்சாலை 19 ஆகிய சாலைகளில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அவுட்டர் ரிங் ரோடு அமைத்து இந்த சாலைகளை இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என சொல்லப்படுகிறது.
கோயம்புத்தூரை பொறுத்தவரை மாநில நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே 32.43 கிலோமீட்டர் தொலைவிற்கு ரிங் ரோடு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. சேலம் கொச்சின் சாலையில் உள்ள மைல்கல்லில் இருந்து நாகப்பட்டினம்- கூடலூர்- மைசூர் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் வரை இந்த ரிங் ரோடு செல்கிறது. இந்த சாலையில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதல் கட்ட பணிக்கு 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் கட்டப்பணி வரும் செப்டம்பரில் முடிந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப்பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
திருநெல்வேலி பொறுத்தவரை 31 கிலோமீட்டர் தொலைவிற்கு ரிங் ரோடு அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை 39, 40,41, 41ஏ ஆகிய நான்கு முக்கிய மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் இந்த ரிங் ரோடு அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக மாநில நெடுஞ்சாலை ஆணையம் திருநெல்வேலி பொட்டல்புதூர் சாலையில் சுத்தமல்லியில் இருந்து கொங்கன்தான் பாறை விளக்கு வரை 12.2 கிலோ மீட்டருக்கு ரிங் ரோடு அமைக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது.
கூடிய விரைவில் அடுத்தடுத்த பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஓசூரை பொறுத்தவரை ஜூஜூவாடியில் இருந்து பேரண்டபள்ளி வரையிலான சாலையில் ரிங் ரோடு கட்டுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications