பட்ஜெட் அறிவிப்பு சூப்பர்.. பாராட்டும் கோயம்புத்தூர் தொழிற்துறையினர்..!

தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடனும், தொழிற்துறை, வர்த்தகம், வேலைவாய்ப்பு வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சென்னையை மட்டுமே தொழில்நகரமாக இருப்பதை தாண்டி மாநிலத்தின் பல பகுதிகளை தொழில்நகரமாக மாற்ற திட்டமிட்டு அதற்கான திட்டங்களையும் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு நிறுவனங்களை மாநிலத்தின் பல பகுதிகள் ஈர்த்துள்ளது.

திங்கட்கிழமை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்ட 2023 - 24 பட்ஜெட் அறிக்கையில் பல முக்கியமான அறிவிப்புகள் கொங்கு மண்டலத்திற்கு பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் தொழிலதிபர்கள் பாராட்டி வருகின்றனர்.

தொழில்நுட்ப நகரம்

தொழில்நுட்ப நகரம்

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும் என பட்ஜெட் அறிக்கையின் தாக்கலின் போது பிடிஆர் தெரிவித்தார். இதோடு ஈரோடு, செங்கல்பட்டு, நெல்லையில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செம்மொழி பூங்கா

செம்மொழி பூங்கா

இதேபோல் கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா இதர வசதிகள் மேம்படுத்த 172 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம்

அவிநாசி, சத்தியமங்கலம் சாலை உள்ளடக்கிய மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ. 9,000 கோடியில் கோவையில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் அறிக்கையின் தாக்கலின் போது பிடிஆர் தெரிவித்தார்.

தொழிற்துறை பூங்கா

தொழிற்துறை பூங்கா

இதோடு சேலம், விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவை ஆகிய பகுதிகளில் தொழிற்துறை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 22000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

CODISSIA தலைவர்

CODISSIA தலைவர்

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து CODISSIA தலைவர் வி.திருஞானம் பட்ஜெட்டை வரவேற்று, இந்த அறிவிப்புகள் கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். இது மட்டும் அல்லாமல் கோவை மாவட்ட இளைஞர்கள் இனி வேலைவாய்ப்புக்காக பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஐடி துறை

ஐடி துறை

TNTECH CITY திட்டம் மூலம் ஐடி துறையிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளை 2783 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்துறை 4.0-க்கு இணையாக உயர்த்த மேம்படுத்தப்பட உள்ளது முக்கியமானதாகும் என CODISSIA தலைவர் வி.திருஞானம் இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்தார்.

பட்ஜெட் அறிவிப்பு

பட்ஜெட் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மாநிலமாக மாற்ற MSME துறை முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இத்துறைக்கு 1,509 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது, இதோடு புதிய சிப்காட் அறிவிப்பு கோவை மாவட்டத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் பல தொழிற்துறை தலைவர்கள் கூறுகின்றனர்.

மக்களாகிய நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+