கோயம்புத்தூரில் நடைபெற்ற டிஎன் ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்
158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு முதல்கட்டமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, கோயம்புத்தூரை தொழில்துறையின் முக்கிய மையமாக மாற்றுவதோடு, தொழில்நுட்ப துறையிலும், எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கும் முயற்சிக்கு இந்த முதலீட்டாளர் மாநாடு முக்கிய தேர்வாக மாறியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம்
கோயம்புத்தூரை ஐடி நகரமாக மாற்றும் வகையில் பல பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை நகரின் முன்னணி நிறுவனமான கே.பி.ஆர் குழுமம் 1,245 கோடி ரூபாய் முதலீட்டில் 9 லட்சம் சதுர அடி அலுவலக வளாகத்துடன் கூடிய புதிய ஐடி பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேபோல் டானி ஷெல்டர்ஸ் நிறுவனம் 700 கோடி ரூபாய் செலவில் 7 லட்சம் சதுர அடி கொண்ட ஐடி பூங்கா ஒன்றை உருவாக்க உள்ளது. இவை இரண்டும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிகிறது.
Bosch முதலீடு
உலக அளவில் புகழ்பெற்ற போஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் நிறுவனம் கோயம்புத்தூரில் மென்பொருளால் இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பான சிறப்பு மையம் (Centre of Excellence) ஒன்றைத் தொடங்க உள்ளது. இது நவீன கார் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னோடி மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தித் துறையில் புதிய முதலீடுகள்
உலகப் புகழ்பெற்ற ஜெர்மனியைச் சேர்ந்த ZF விண்ட் பவர் நிறுவனம் கோயம்புத்தூரில் காற்றாலை கியர்பாக்ஸ் தயாரிக்க 150 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேதொடர்ந்து கோயம்புத்தூரைச் சேர்ந்த Pricol நிறுவனம் வாகன உதிரிபாகங்கள், மேம்பட்ட டிஸ்ப்ளே யூனிட் மற்றும் ஆராய்ச்சி பிரிவு அமைக்க கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 555.7 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. அதேபோல் நகரின் பிரபலமான சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் பம்புகள் மற்றும் மோட்டார்கள் தயாரிக்க 2,060 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
போக்குவரத்து மற்றும் கட்டுமான துறை திட்டங்கள்
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கட்டுமான வாகன உற்பத்திக்காக Propel நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை-யின் அடையாளம்
கோயம்புத்தூரின் புகழ்பெற்ற லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் (எல்.எம்.டபிள்யூ) நிறுவனம் பொது உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்புக்காக 1,050 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. நெசவு இயந்திரங்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம் இப்போது நவீன தொழில்நுட்பத் துறையிலும் காலடி எடுத்து வைக்கிறது.
இந்த மாநாட்டின் மூலம் கோயம்புத்தூர் வெறும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட எதிர்காலத் தொழில்களின் மையமாகவும் உருவாகவுள்ளது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும் இந்த முதலீடுகள் உறுதி செய்கின்றன.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications