தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் முதல் இடத்தில் இருக்கும் கோயம்புத்தூர்-க்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 முக்கிய முதலீடுகள் வந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளில் உற்பத்தி துறையை விடவும் டெக் மற்றும் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் பெங்களூர்-க்கு மாற்றாகக் கோயம்புத்தூர்-ஐ தேர்வு செய்கிறது.
ஐடி துறையினருக்கு ஏற்றார் போல் கோயம்புத்தூரில் கிளைமேட் கண்டிஷன், திறன்வாய்ந்த ஊழியர்கள், கல்வி கட்டமைப்பு, அடுத்த 20 வருடத்திற்குத் தொடர்ந்து கிடைக்கக் கூடிய படித்த பட்டதாரிகள் வளம் என 10 பொருத்தமும் பாக்கவாக இருக்கும் நகரமாக உள்ளது. இதைவிட முக்கியமாகக் கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் விலைவாசி மிகவும் குறைவு என்பது மாற்றொரு சிறப்பு.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 முக்கிய முதலீடுகளை என்ன..? இந்த முதலீடுகள் மூலம் எத்தனைப்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் அடிப்படையே உற்பத்தி என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. இதன் வாயிலாக கோயம்புத்தூரில் 750 கோடி முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ZF விண்ட் டர்பைன் அமைக்க உள்ளது. இதற்காகத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2வது நாள் கூட்டத்தில் கையெழுத்தானது.
இதை தொடர்ந்து கோயம்புத்தூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் KGISL, தமிழ்நாடு அரசாங்கத்துடன் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் IT டெக் பார்க் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஐடி பார்க் மூலம் புதிய ஐடி நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தை அமைக்க முடியும்.
மேலும் கோயம்புத்தூரில் தற்போது திரும்பும் இடமெல்லாம் ஐடி பார்க், பெரிய அலுவலகங்கள் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் மெட்ரோ, சாலை விரிவாக்கம், பாலம், விமான நிலைய விரிவாக்கம் என பல திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதால் கோவை மாநகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோயம்புத்தூர்-க்கு அதிகப்படியான முதலீட்டை எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அரசு ஏற்றுமதி சார்ந்த முதலீடுகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் கோவை, மதுரையில் கணிசமான முதலீடுகளே வந்துள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications