தமிழ்நாட்டு மக்களும், முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் இனி சென்னையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதற்கு முக்கியமான உதாரணம் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு ஒரு முக்கியமான உதாரணம்.
தமிழ்நாட்டில் நடந்த கடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டைக் காட்டிலும் இந்த முறை சென்னையைத் தாண்டி அதிகப்படியான முதலீடுகள் பிற மாநிலங்களுக்குக் குவிந்துள்ளது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்திற்கு முதலீடுகள் வராதது வருத்தம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும் பெருமளவிலான முதலீடுகள் பிற மாவட்டத்திற்குச் சென்றுள்ள பெரிய ஜாக்பாட் ஆகவே பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை-க்கு அடுத்தபடியாக முக்கிய மாவட்டமாகக் கோயம்புத்தூர் திகழும் வேளையில் முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது.
கோயம்புத்தூர் என்றாலே நம் நினைவுக்குச் சிறுவாணி தண்ணீர் முதல் மருத மலைக் கோவில் வரையில் பலவும் நினைவுக்கு வரலாம், ஆனால் தொழிற்துறை என்று வந்துவிட்டால் கோயம்புத்தூர்-க்கு பெயர்போன MSME, உற்பத்தி நிறுவனங்கள் தான். ஆனால் கடந்த 5 வருடத்தில் கோயம்புத்தூரின் கலரே மொத்தமாக மாறியுள்ளது.
கோயம்புத்தூர் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு ஐடி மற்றும் டெக் நிறுவனங்களை ஈர்க்கும் முக்கியச் சக்தியாக விளங்குவது மட்டும் அல்லாமல் இந்திய அளவில் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது. பெங்களூர்-க்கு மாற்று இடமாகக் கோயம்புத்தூர் பார்க்கப்படுவதால் கோயம்புத்தூர் புதிய ஐடி நகரமாக மாறி வருகிறது.
ஏற்கனவே கோயம்புத்தூரில் திரும்பும் பக்கமெல்லாம் ஐடி நிறுவனங்களாக இருக்கும் வேளையில் தமிழ்நாடு அரசு கட்டி வரும் 2 மெகா ஐடி பார்க் விரைவில் திறக்கப்படும் வேளையில், வெளிநாட்டிலிருந்தும், வெளியூரிலிருந்து வரும் நிறுவனங்களுக்குப் போதுமான இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்கச் சுமார் 7 ஐடி பார்க்குகள் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.
1. L&T IT பூங்கா - 18.5 லட்சம் சதுர அடி
2. இந்தியா லேண்ட் டெக் பார்க் - 4 லட்சம் சதுர அடி
3. ஆதித்யா டெக் பார்க் - 3 லட்சம் சதுர அடி
4. SVB தொழில்நுட்ப பூங்கா - 2.6 லட்சம் சதுர அடி
5. எல்காட் டவர் - 2.6 லட்சம் சதுர அடி
6. கேபிஆர் ஐடி பூங்கா - 2.17 லட்சம் சதுர அடி
7. ரத்தினம் தொழில்நுட்ப மண்டலம் - 1.5 லட்சம் சதுர அடி.
இப்படி 34.37 லட்சம் சதுரடி பரப்பளவிலான ஐடி அலுவலக இடங்கள் தயாராகி வருகிறது. இதன் மூலம் கோயம்புத்தூர் இனி உற்பத்தி நகரமாக இல்லாமல் ஐடி நகரமாக மாற உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கோயம்புத்தூர் உற்பத்தி மற்றும் ஐடி துறையில் இணைந்து வளரும் காரணத்தால் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு கிடைக்கும்.
இதோடு நிற்காமல் Wynfra சைபர் சிட்டி - KGISL - 16 லட்சம் சதுர அடி, KCT தொழில்நுட்ப பூங்கா - 4 லட்சம் சதுர அடி, எல்காட் ஐடி பூங்கா (நீலம்பூர்) - 1 மில்லியன் சதுர அடி என 3 திட்டங்களின் கட்டுமானத்திற்காக ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
More From GoodReturns

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications