கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர் மாநாடு மற்ற மாநாடுகளிலிருந்து வேறுபட்டது. இங்கு உள்ளூர் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை இந்த மாநாட்டில் அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை செய்வதாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் கையெழுத்தாகியுள்ளன.
கோவை மாவட்டம் ஆதிகாலம் முதலே ஒரு தொழிற்துறை நகரமாகவே இருந்து வருகிறது, டெக்ஸ்டைல், மோட்டார் பம்பு, MSME நிறுவனங்கள் என இப்பகுதியில் இருக்கும் மக்கள் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்ஜியங்களின் வாயிலாக தொடர்ந்து வலிமையுடன் இருந்து வருகிறது.

கடந்த 10-15 வருடமாக கோயம்புத்தூர்-ன் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு தனிப்பட்ட வகையில் கவனம் செலுத்தி அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும், கோயம்புத்தூர் மாவட்டம் இன்னும் சுயசார்ப்பிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கு நேற்று நடந்த TN Rising முதலீட்டாளர் மாநாடு ஒரு உதாரணம்.
TN Rising முதலீட்டாளர் மாநாடு இதற்கு முன்பு ஓசூர், தூத்துக்குடியில் நடந்தது, அடுத்தாக மதுரையில் நடக்க உள்ளது. எந்த கூட்டத்தில் உள்ளூர் நிறுவனங்கள் இவ்வளவு அதிகமான முதலீட்டை செய்தது இல்லை, கோயம்புத்தூர் கூட்டம் இதற்கு விதிவிலக்காக உள்ளது.
உற்பத்தித் துறை
உற்பத்தித் துறையில் கோயம்புத்தூரின் அடையாளமாக விளங்களும் நிறுவனங்கள் புதிய திட்டங்களை TN Rising முதலீட்டாளர் மாநாட்டில் அறிவித்துள்ளது. லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் (LMW) புதிய இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்குகிறது. பிரிகோல் (Pricol) வாகன உதிரிபாகங்கள் மற்றும் மேம்பட்ட டிஸ்ப்ளே தயாரிப்பு, ஆராய்ச்சி மையங்களை அமைக்கிறது.
ப்ரோபெல் (Propel) கட்டுமான இயந்திரங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்கிறது. சக்தி குழுமம் (Sakthi Group) விமான பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் புதிய அலகைத் தொடங்குகிறது. சிஆர்ஐ பம்ப்ஸ் (CRI Pumps) பம்புகள் மற்றும் மோட்டார்கள் தயாரிப்பை அதிகரிக்கிறது.

சுகாதாரத் துறை
சுகாதாரத் துறையில் கோயம்புத்தூர் ஏற்கனவே முன்னோடியாக இருக்கும் வேளையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக கேஜி ஹாஸ்பிடல் (KG Hospital) புதிய பல்நோக்கிய மருத்துவமனை வளாகத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கிறது. இது 5,000 புதிய வேலைகளை உருவாக்க உள்ளது.
ஐடி துறை
தகவல் தொழில்நுட்பத் துறையில் கேபிஆர் (KPR) 1,245 கோடி ரூபாய் செலவில் 9 லட்சம் சதுர அடி ஐடி பூங்காவை அமைக்கிறது. டானி ஷெல்டர்ஸ் (Tanny) 700 கோடி ரூபாய் முதலீட்டில் 7 லட்சம் சதுர அடி அலுவலக வளாகத்தை உருவாக்குகிறது. ஸ்ரீ சக்தி (Sri Sakthi) மற்றும் காசா கிராண்ட் (Casa Grande) புதிய ஐடி/ஐடிஇஎஸ் பூங்காக்களைத் தொடங்குகின்றன. ஸ்ரீ கிருஷ்ணா (Sri Krishna) டேட்டா சென்டரை அமைக்கிறது.
இந்த மாநாட்டில் உள்ளூர் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications