தலைகீழாக மாறும் கோயம்புத்தூர்.. ஐடி துறை வளர்ச்சியால் இப்படியொரு டிவிஸ்ட்டா..!!

கோயம்புத்தூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது டெக்ஸ்டைல், மோட்டார் உற்பத்தி, MSME நிறுவனங்கள் போன்றவை தான், ஆனால் கடந்த 10 வருடத்தில் ஐடி சேவை துறை, ஸ்டார்ட்அப் பிரிவில் நாட்டிலேயே வேகமாக வளரும் 2ஆம் நிலை நகரமாக வளர்ச்சி அடைந்துள்ளது. சொல்லப்போனால் பெங்களூரில் நிறுவனத்தை அமைக்க வேண்டும் எனத் திட்டம் போடும் பலருக்கும் கோயம்புத்தூர் 2ஆம் தேர்வாக உள்ளது.

இந்த அதிரடி வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது, கோயம்புத்தூரில் இந்த திடீர் ஐடி சேவைத் துறை வளர்ச்சிக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதி இல்லை, குறிப்பாக அலுவலக இடங்கள், முழுமையான கார்ப்ரேட் எகோசிஸ்டம் இல்லை.

 தலைகீழாக மாறும் கோயம்புத்தூர்.. ஐடி துறை வளர்ச்சியால் இப்படியொரு டிவிஸ்ட்டா..!!

இதனால் தற்போது கோயம்புத்தூர் முழுக்க தற்போது கோ வொர்கிங் ஸ்பேஸ் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் போதுமான அலுவலகங்கள் உருவாக்கப்படாத காரணத்தால் கோ வொர்கிங் ஸ்பேஸ் வாடகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தற்போது பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது.

மேலும் தனியாக அலுவலகம் அமைக்க அதிக அளவிலான முதலீடு செய்ய வேண்டும் என்பதால் கோயம்புத்தூர்-க்கு முதல் முறையாக வரும் நிறுவனங்கள் இதற்குத் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் தற்போது பெரிய நிறுவனங்கள் முதல் புதிதாகத் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை அனைத்தும் கோ வொர்கிங் ஸ்பேஸ் அலுவலக இடங்களைத் தேர்வு செய்து வருகின்றன.

நகரின் மையப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கோ வொர்கிங் ஸ்பேஸ் நீண்ட கால அடிப்படையில் புக்கிங் செய்யப்பட்டு உள்ள காரணத்தால் நிறுவனங்கள் இப்போது புறநகர் பகுதிகளுக்குச் செல்ல துவங்கியுள்ளது.

இதனால் சரவணம்பட்டி, பீளமேடு, விளாங்குறிச்சி, காளப்பட்டி, சின்னியம்பாளையம், ஈச்சனாரி மற்றும் சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் Co-Working Space-க்கான தேவை அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அலுவலக இடத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிமாண்ட் அதிகரிக்கும் போது வாடகையும் அதிகரிக்கும் காரணத்தால் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இது கூடுதல் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

உதாரணமாக ஆர்.எஸ்.புரம், சத்தி ரோடு, லட்சுமி மில்ஸ், ஹோப் காலேஜ் மற்றும் பீளமேடு போன்ற முக்கிய வர்த்தக பகுதிகளில் இருக்கும் கோ வொர்கிங் ஸ்பேஸ்-ல் ப்ரைவேட் கேபின்களுக்கு ஒரு சீட்டுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. 10 இருக்கைகள் கொண்ட கேபினுக்கு மாதம் 1.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் பொது இடத்தில் இருக்கும் ஒரு சீட்டுக்கு 4500 முதல் 8000 ரூபாய் வரையிலும், Dedicated இருக்கைக்கு 6000 முதல் 10000 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. தற்போது அலுவலக இடம் இல்லாத சூழ்நிலையில் இத்தகைய அதிக வாடகை கொண்ட கோ வொர்கிங் ஸ்பேஸ்-க்கு செலவு செய்ய நிறுவனங்கள் தயாராக உள்ளது.

ஆனால் இதே நிலை தொடர்ந்தால் தற்போது அதிக எண்ணிக்கையில் வரும் நிறுவனங்கள் குறைந்துவிடும், இதனால் ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டாளர்கள் வேகமாகக் கோயம்புத்தூரில் அலுவலக மற்றும் கார்ப்ரேட் எகோசிஸ்டத்தை வேகமாக உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+