தென்னிந்தியாவில் மெட்ரோ நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஐடி சேவை மற்றும் டெக் சேவை துறையில் வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களில் கோயம்புத்தூர் முதல் இடத்தில் உள்ளது என்றால் மிகையில்லை. பல தசாப்தங்களாகக் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உற்பத்தி, MSME நிறுவனங்கள், டெக்ஸ்டைல் துறைகளை மட்டுமே நம்பி வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் சார்ந்து இருந்தது.
ஆனால் கடந்த 5 வருடத்தில் சிறிய அளவில் இருந்த ஐடி மற்றும் டெக் சேவை துறை தற்போது விஸ்வரூபம் எடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் புதிய அலுவலகம் திறப்பு ஆகியவை தற்போது இந்திய முழுவதும் இருந்து தமிழ்நாட்டு டெக் ஊழியர்களைக் கோயம்புத்தூருக்கு வர தூண்டியுள்ளது என்றால் மிகையில்லை.
இப்படியிருக்கையில் இன்று கோயம்புத்தூர் ஐடி துறை சார்ந்து 3 முக்கிய அறிவிப்புகள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரயான் வெற்றியின் மூலம் ஏரோஸ்பேஸ் துறையைச் சார்ந்த பல நிறுவனங்கள் கோயம்புத்தூரில் இருப்பது தெரிய வந்தது மூலம் பலருக்கும் வியப்பாக இருந்தது.
சவுதி அரேபியா நாட்டின் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறை நிறுவனமான NAF Technologies கோயம்புத்தூரில் பிரபலமான KDISL டெ்க் பார்க்கில் புதிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டரை திறக்க உள்ளது. இந்தியாவில் பாதுகாப்புத் துறை உற்பத்தியும், பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சவுதி அரேபியா NAF Technologies கோயம்புத்தூரில் அலுவலகத்தைத் திறந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஐடி சப்போர்ட் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் QbrainX நிறுவனம் கோயம்புத்தூர், ஹைதராபாத், அமெரிக்கா, துபாயில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வரும் வேளையில் புதிய அலுவலகத்தை டைடல் பார்க்-ல் திறக்க உள்ளது. QbrainX ஏற்கனவே கோயம்புத்தூரில் தனது கார்பரேட் அலுவலகத்தை நவ இந்தியாவில் ஹனுதேவ் இன்போபார்க்-லும், டெவலெப்மென்ட் சென்டரை சாய்பாபா காலணியிலும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் LTI Mindtree நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 800 ஊழியர்களைப் புதிதாகச் சேர்க்க உள்ளது, இதன் மூலம் கோயம்புத்தூர் LTI Mindtree நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர உள்ளது, LTI Mindtree அலுவலகம் ரத்தினம் டெக் பார்க்-ல் அமைந்துள்ளது. LTI Mindtree கோயம்புத்தூர் தாண்டி தமிழ்நாட்டில் சென்னையில் மணப்பாக்கம் மற்றும் தரமணி ராமானுஜன் ஐடி பார்க் ஆகியவற்றில் அலுவலகத்தைக் கொண்டு உள்ளது.
கோயம்புத்தூரில் அலுவலக இடத்திற்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் KGISL SEZ பகுதியில் IndiaLand Tech Park தனது 3வது கட்ட விரிவாக்க பணிகளைப் படுவேகமாகச் செய்து வருகிறது. இதன் மூலம் இந்தியா லேண்ட் டெக் பார்க் சுமார் 4 லட்சம் சதுரடி கொண்ட அலுவலக இடம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதேபோல் காசா கிராண்டே நவஇந்தியா பகுதியில் 90,000 சதுரடி கொண்ட Casagrand Crown என்ற வர்த்தக அலுவலகக் கட்டிடத்தை வேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
மேலும் SPAN Venture SEZ நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே டெக் பார்க் வைத்துள்ள இடத்தில் 1.5 லட்சம் சதுரடி அளவிலான அலுவலகத்தை அமைக்கும் விரிவாக்க பணிகளைத் தற்போது துவங்கியுள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூரில் கமர்சியல் ரியல் எஸ்டேட் வர்த்தகம் எப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, இதனால் கடந்த 5 வருடத்தில் நிலத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications