தமிழ்நாட்டின் பெங்களூராக மாறி வரும் கோயம்புத்தூர்-க்கு ஸ்பெயின் நாட்டின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனம் முக்கிய விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
சினிமா தயாரிப்பாளர் தில் ராஜூ ஸ்டைலில் சொல்ல வேண்டுமெனில் கோயம்புத்தூரில் என்ன வேண்டும்..? ஐடி கம்பெனி வேணுமா இருக்கு, திறமையான ஊழியர்கள் வேணுமா இருக்கு, பெங்களூர் போலக் கிளைமேட் வேணுமா இருக்கு, இப்படி எல்லாமே இருக்கும் கோயும்புத்தூர் பெங்களூர் ரியல் எஸ்டேட் விலையைப் பார்த்துப் பயப்படும், நீண்ட கால வளர்ச்சியை நோக்கி ஓடும் அனைத்து நிறுவனங்களுக்கும் கோயம்புத்தூர் ஏதுவான நகரமாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசுடன் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் The AmeriCorp Group இந்திய ரியல் எஸ்டேட் துறையில் IndiaLand நிறுவனத்தின் பெயரில் இயங்கி வருகிறது. IndiaLand நிறுவனம் கோயம்புத்தூரில் புதிய அலுவலக இடங்களைக் கட்டமைக்கத் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாகக் கோயம்புத்தூரில் இருக்கும் இந்தியாலேண்ட் டெக் பார்க்-ன் விரிவாக்கத் திட்டத்திற்குச் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் இருக்கும் இந்தியாலேண்ட் டெக் பார்க்-ல் ஏற்கனவே டவர் ஏ, பி, சி ஆகியவை திறக்கப்பட்டு இயங்கி வரும் வேளையில் தற்போது டவர் டி கட்டுமானம் நடைபெற்று வரும் வேளையில் சுமார் 5 லட்சம் சதுரடி பரப்பளவிலான அலுவலக இடங்கள் உருவாக்க உள்ளது.
இதன் மூலம் இந்தியாலேண்ட் டெக் பார்க் மொத்த 18 லட்சம் சதுரடி பரப்பளவிலான அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. கோயம்புத்தூர் மாநகரின் ஐடித்துறை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சுமார் 7 லட்சம் சதுரடி கொண்ட டவர் ஈ திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது கோயம்புத்தூரில் இருக்கும் இந்தியாலேண்ட் டெக் பார்க், இம்மாவட்ட கமர்சியல் ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் தமிழ்நாடு அரசு கட்டி வரும் 2 மெகா ஐடி பார்க் விரைவில் திறக்கப்படும் வேளையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நிறுவனங்களுக்குப் போதுமான இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்கச் சுமார் 7 ஐடி பார்க்குகள் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.
1. L&T IT பூங்கா - 18.5 லட்சம் சதுர அடி
2. இந்தியா லேண்ட் டெக் பார்க் - 4 லட்சம் சதுர அடி
3. ஆதித்யா டெக் பார்க் - 3 லட்சம் சதுர அடி
4. SVB தொழில்நுட்ப பூங்கா - 2.6 லட்சம் சதுர அடி
5. எல்காட் டவர் - 2.6 லட்சம் சதுர அடி
6. கேபிஆர் ஐடி பூங்கா - 2.17 லட்சம் சதுர அடி
7. ரத்தினம் தொழில்நுட்ப மண்டலம் - 1.5 லட்சம் சதுர அடி.
இப்படி 34.37 லட்சம் சதுரடி பரப்பளவிலான ஐடி அலுவலக இடங்கள் தயாராகி வருகிறது. இதோடு நிற்காமல் Wynfra சைபர் சிட்டி - KGISL - 16 லட்சம் சதுர அடி, KCT தொழில்நுட்ப பூங்கா - 4 லட்சம் சதுர அடி, எல்காட் ஐடி பூங்கா (நீலம்பூர்) - 1 மில்லியன் சதுர அடி என 3 திட்டங்களின் கட்டுமானத்திற்காக ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications