தமிழ்நாடு அரசு இடைக்கால பட்ஜெட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின்போது கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட பல திட்டங்களை அறிவித்தார்.

நவீன நூலகங்கள்
கோயம்புத்தூர் இளைஞர்கள், மாணவர்களுக்கான கல்வி மற்றும் புதுமைகள் குறித்த அறிவு அணுகலை விரிவாக்கும் நோக்கில் கோயம்புத்தூர் உட்பட திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.902 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான கல்வியும், கவ்வி வாய்ப்புகளையும் எளிதில் கிடைக்கச் செய்யும் இத்திட்டம் ஏற்கனவே கல்வி நகரமாக இருக்கும் கோயம்புத்தூரின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு மையங்கள்
சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு மையங்கள் (Centers of Excellence) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவும். கோயம்புத்தூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு இணைந்து இளைஞர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப பயிற்சி கிடைக்கும்.
கோயம்புத்தூர் தங்க நகை பூங்கா
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்க நகை பூங்கா (Gold Jewellery Park) அமைக்கும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் ரூ.81 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இது கோவை நகைத் தொழிலை மேம்படுத்தி உள்ளூர் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் வாய்ப்பை உருவாக்கும். கோயம்புத்தூரின் பாரம்பரிய நகைத் தொழிலுக்கு புதிய உயிர் கொடுக்கும் திட்டமாக இது திகழும்.
செம்மொழி பூங்கா
கோயம்புத்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா ரூ.208 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கோவை நகர்புற வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
உலகளாவிய திறன் மையங்கள்
சென்னையில் 250-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) செயல்படும் நிலையில், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களும் இத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இது கோயம்புத்தூரை IT மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்துக்கு
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பியுள்ளது. இந்நகர மக்கள்தொகை 20 லட்சத்துக்கு குறைவாக உள்ளது என்ற காரணத்தை முன்வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒப்புதல் கோரி வருகிறது. கோயம்புத்தூர் போக்குவரத்து சிக்கலைத் தீர்க்கும் முக்கிய திட்டமாக இது உள்ளதால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முக்கியதுவம் அளித்து வருகிறது.
டெக்ஸ்டைல் தரச் சோதனை ஆய்வகம்
டெக்ஸ்டைல் தொழிலில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (SITRA) ரூ.6 கோடி செலவில் மேம்பட்ட தரச் சோதனை ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. sports textiles போன்ற ஜவுளிகளின் தரத்தை உயர்த்தி உலக சந்தையில் போட்டியிடவும் இது உதவும்.
பயங்கரவாத எதிர்ப்புப் படை
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் மூன்று பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.
கோயம்புத்தூர் மாவட்டம் தொழில், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் முன்னணி மாவட்டமாக உருவெடுத்து வருகிறது. இடைக்கால பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்புகள் மாவட்ட மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. தொழில்மயமாக்கல், கல்வி மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் ஆகியவை கோயம்புத்தூரின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications