தமிழ்நாட்டில் தற்போது சென்னை மட்டும் அல்லாமல் பல முக்கிய மாவட்டங்கள் அதிகப்படியான அரசு முதலீட்டு திட்டங்களால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் முக்கியமாக கோயம்புத்தூர் அரசு முதலீடுகள் மட்டும் அல்லாமல் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த வாரம் துவங்கப்பட்டு உள்ளது. இத்திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த கோயம்புத்தூர்-ம் பளபள-ன்னு மாறப்போகிறது.
கோவை மாவட்டத்தில் சுமார் 1010.19 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கிவைத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 1010.19 கோடி ரூபாய் மதிப்பிலான செலவின் பெரும்பகுதி, கிட்டத்தட்ட 860.80 கோடி ரூபாய் செலவில் TWAD வாரியத்தால் (Tamil Nadu Water Supply and Drainage Board) செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரையில் பாதாள சாக்கடை இல்லாத இடங்கள் என பட்டியலிடப்பட்டு சேர்க்கப்பட்டு உள்ள இடங்களும் அடக்கம்.
இதை தொடர்ந்து 40.67 கோடி ரூபாயில் ரேஸ்கோர்ஸ் வழியாக மாதிரி சாலை அமைத்தல், 31.65 கோடி ரூபாயில் செல்வம்பதி மற்றும் குமாரசாமி தண்ணீர் டேங்க், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நஞ்சுண்டாபுரத்தில் 40 MLD சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவுதல், 19.36 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி குளம் மேம்பாடு ஆகிய பணிகளும் அடங்கும்.

இதோடு நிற்கவில்லை கோயம்புத்தூர் சாலையோரங்களில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கு வாகனங்களை வழங்குதல் மற்றும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மைக்கான வாகனங்கள் வாங்கப்பட உள்ளது.

வெள்ளலூரில் 75 லட்சம் மதிப்பில் வாரச்சந்தை, மாநகராட்சி பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களை நியமித்தல், சூலூர், கண்ணம்பாளையம், கோட்டூர், திருமலையாம்பாளையம், வேட்டைக்காரன்புதூர் ஆகிய நகர பஞ்சாயத்துகளுக்கு வாகனங்கள் வழங்குதல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் டாடாபாத் பகுதியில் ஒரு அறிவியல் பூங்கா நிறுவப்பட உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications