தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையும் பகுதியாக கோயம்புத்தூர் விளங்கும் வேளையில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கண்கள் கோவை மீது திரும்பியுள்ளது. பல வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் சீட் ஃபண்டிங் செய்ய கோயம்புத்தூரில் அலுவலகத்தை துவங்கியுள்ளது என்றால் மிகையில்லை.
தற்போது ஒரு படிக்கு மேல் உலகிலேயே மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவின் FIDELITY, கோயம்புத்தூர் பிராந்தியத்தின் முக்கிய வர்த்தக துறையாக இருக்கும் டெக்ஸ்டைல் துறையின் முன்னணி நிறுவனமான KPR MILLS நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்து தனது கோயம்புத்தூர் முதலீட்டு பயணத்திற்கு அடித்தளமிட்டு உள்ளது.

FIDELITY நிறுவனம் பல நாடுகளில், பல துறையை சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளது. அமெரிக்க முதலீடு சந்தையில் இருந்து தடுமாற்றங்கள் குறைந்துள்ள காரணத்தால் பெரிய முதலீட்டு நிறுவனம் மீண்டும் அதிரடி காட்ட துவங்கியுள்ளது.
இந்த நிலையில் ஜூன் மாதம் கோவை பழமுதிர் நிலையம் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை சுமார் 600 கோடி ரூபாய்க்கு அமெரிக்கா தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது FIDELITY நிறுவனம் இதே கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான கேபிஆர் மில்ஸ்-ல் முதலீடு செய்துள்ளது.

கேபிஆர் மில்ஸ் நிறுவனம் 24,629 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பிடப்படும் வேளையில், இந்த நிறுவனத்தில் சுமார் 1 சதவீத பங்குகளை FIDELITY நிறுவனம் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 1,615.99 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளது கேபிஆர் மில்ஸ் நிறுவனம். மேலும் கேபிஆர் மில்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

கேபிஆர் மில்ஸ் நிறுவனம் நூல், துணி, ஆடைகள் ஆகியவற்றை டெக்ஸ்டைல் துறையில் தயாரிக்கும் வேளையில் மறுபுறம் சர்க்கரை தயாரிப்பிலும் KRP SUGARS நிறுவனம் வாயிலாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10.84 சதவீதம் வளர்ச்சி அடைந்தாலும் இந்த முதலீட்டுக்கு பின்பு பல ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்த நிலையில் கடந்த 5 நாள் வர்த்தகத்தில் 2.51 சதவீதம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications