பணிநீக்கம், வேலைவாய்ப்பு இல்லை, பிரஷ்ஷர்களுக்கு இனி வேலை கிடைப்பது கடனம், சம்பள குறைப்பு, வேரியபிள் பே கட், பதவி உயர்வு ஒத்திவைப்பு, அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் குறைந்தது.. இப்படி கடந்த ஒரு மாதமாக மாத சம்பளக்காரர்களைப் பாடாய் படுத்துகிறது இந்த ஏஐ.
ஏஐ இப்போது தான் வந்ததா என்றால் இல்லை, சமீபத்தில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்த ஏஐ ஏஜெண்ட், Perplexity-யின் காமெட் இணைய தளம், சீனாவில் அறிமுகமான புதிய LLM, ஏஐ பயன்படுத்துவதும், அதன் மூலம் ஏற்படும் நன்மைகளின் உண்மைத் தன்மை ஆகியவை கடந்த 2-3 மாதத்தில் அதிகளவில் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் டிசிஎஸ்-ன் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்பு வெளியான பின்பு தான் ஏஐ தாக்கத்தின் எதிரொலி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது, இந்திய ஸ்டார்ட்அப் துறையில் ஏஐ பயன்பாடு கடந்த 2 வருடமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் டிசிஎஸ் போன்ற பெரும்பான்மையான நிறுவனத்தின் பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரபல வேலைவாய்ப்பு தளமான Nakuri ஜூலை மாத ஜாப் டிரெண்ட் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
இதில் பல முக்கியமான விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது, குறிப்பாக டெக் ஊழியர்களும், 2ஆம் நிலை நகரங்களில் கோயம்புத்தூர் எந்த அளவுக்கு டெக் துறையும், டெக் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.

நாக்ரி ரிப்போர்ட்:
நாக்ரி ஜாப்ஸ்பீக் அறிக்கையின்படி, இந்தியாவின் ஐடி துறையில் ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு செயல்பாடு கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 1% சரிந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் பதிவான 5% வளர்ச்சியை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இந்த தரவு, ஐடி துறையில் தற்போதைய தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களை காட்டுகிறது.
AI மற்றும் ML வேலைவாய்ப்புகள்:
ஐடி துறையில் பொதுவாக வேலைவாய்ப்பு சரிவு இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) துறைகளில் பணி தேவை உறுதியாக உள்ளது. இந்த துறைகளில் வேலைவாய்ப்பு ஜூன் மாதத்தில் பதிவான அளவுக்கு இணையாக ஜூலை மாதத்தில் 41% அளவில் நிலைத்திருக்கிறது. இது இந்திய தொழில்நுட்ப சந்தையில் AI மற்றும் ML எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

white-collar வேலைவாய்ப்புகள்:
ஜூலை மாத்தில் வொயிட் காலர் வேலைவாய்ப்புகள் 7% வளர்ச்சி பதிவாகியுள்ளது, இந்த அதிரடியான வளர்ச்சிக்கு ஐடி துறைல காரணம் அல்ல பிற துறைகள் மூலம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது ஜூன் மாதத்தில் பதிவான 11% வளர்ச்சியை விட குறைவாக உள்ளது.
ஜூலை மாதத்தில் ஹோஸ்பிடாலிட்டி துறையில் வேலைவாய்ப்புகள் 26% அதிகரித்துள்ளது முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து காப்பீடு துறையில் 22% உயர்வை பதிவு செய்துள்ளது.
பிரஷ்ஷர்கள்:
இதேவேளையில் கல்லூரி படிப்பை முடிது வேலைவாய்ப்பில் புதிதாக சேரும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் ஜூலை மாதத்தில் 8% க்கும் மேல் உயர்ந்துள்ளது. கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற ஐடி அல்லாத துறைகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் பிரஷ்ஷர்களுக்கு உருவாகியுள்ளது.

கோயம்புத்தூர் டாப்பு:
பிரஷ்ஷர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுத்ததில் தென்னிந்திய நகரங்களான கோயம்புத்தூர் 17% உயர்வையும், கோச்சி 15% அதிகரிப்பையும் பதிவு செய்து முதல் இரண்டு இடத்தில் உள்ளது. இதில் சென்னை, பெங்களூர், மும்பை, நொய்டா போன்ற பெரு நகரங்கள் கூட இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
அனுபவமிக்க ஊழியர்கள்:
மறுபுறம், 16 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 13% வளர்ச்சியை கண்டுள்ளது, இது ஜூன் மாதத்தில் பதிவான 15% உயர்விலிருந்து சிறிது குறைவாக உள்ளது. இப்பிரிவு வேலைவாய்ப்புகள் BPO, ITES, மருந்து, மற்றும் பயோடெக்னாலஜி போன்ற துறையில் அனுபவமிக்க ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications