இந்தியாவின் பெரு நகரங்கள் அனைத்தும் போதுமென்ற அளவுக்கு விரிவாக்கம் அடைந்து மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலை பல நகரங்களில் உள்ளது. இது மக்களுக்கு மட்டும் அல்லாமல் பெரு நிறுவனங்களின் நீண்ட கால திட்டத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இதேவேளையில் பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இந்த நிலையில் தான் 2ஆம் தர நகரங்கள் முக்கியதுவம் பெறுகிறது, குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பின்பு பல வருடங்களாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முதலீடுகளை செய்து இன்பார கட்டமைப்புகளை மேம்படுத்தி, மக்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்தி, ஸ்டார்ட்அப் எகோசிஸ்டம் உருவாகி, அரசின் உதவி திட்டங்கள் மூலம் 2ஆம் தர நகங்களின் மிகவும் முக்கியமான வளர்ச்சி பகுதியாகவும், அடுத்த டெக்னாலஜி ஹப் உருவாகும் தளமாக மாறியுள்ளது.

இந்திய பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும் டெக்னாலஜி ஹாப்கள் தனது அடுத்த அலையில் 2ஆம் தர நகரங்களுக்கு படையெடுக்க துவஹ்கியுள்ளது. இதன் படி இந்தியாவில் சுமார் 26 2ஆம் தர நகரங்கள் மிகவும் முக்கியமானது என டெலாய்ட் இந்தியா மற்றும் நாஸ்காம் செய்த ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டு, பட்டியலிடப்பட்டு உள்ளது.
டெக்னாலஜி ஹப்கள் உருவாக சிறந்த இடமாக டெலாய்ட் இந்தியா மற்றும் நாஸ்காம் செய்த ஆய்வில் இடம்பெற்ற 26 நகரங்கள் அடங்கிய பட்டியலில் முக்கிய நகரங்களாக சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, போபால், ராஞ்சி, கவுகாத்தி, புவனேஸ்வர், விஜயவாடா, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், மைசூர் மற்றும் கொச்சி ஆகிய உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகியவை இடம்பெற்றுள்ளது, இதற்கான எதிரொலியை நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம். வாரம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் திறப்பு, 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு டெக் பார்க் விரிவாக்கம், 6 மாதத்திற்கு ஒரு முறை பெரிய டெக் பார்க் அல்லது அலுவலக இடம் அமைக்கும் அறிவிப்பு என இந்த 3 மாவட்டமும் அசத்தி வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையை விடுத்து இப்போது மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற 2ஆம் தர நகரங்களுக்கு வர முக்கியமான காரணம் திறன் வாய்ந்த ஊழியர்கள் 25 முதல் 30 சதவீதம் குறைவான சம்பளத்தில் கிடைக்கின்றனர். ரியல் எஸ்டேட் செலவு அதாவது வாடகை, குத்தகை, அலுவலக பராமரிப்பு செலவுகள் என 50 சதவீதம் பெரு நகரங்களை ஒப்பிடுகையில் குறைவாக கிடைக்கிறது.

தற்போதைய சந்தை நிலவரத்தின் படி இந்திய டெக் திறமைகள் 11 முதல் 15 சதவீதம் பேர் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் உள்ளனர். பெரு நகரங்களில் இருந்து வெளியேறும் போது புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது மட்டும் அல்லாமல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து பட்டம் பெறும் நாட்டின் 60 சதவீத இன்ஜினியரிங் மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சையின்ஸ் பட்டதாரிகளை இந்த நிறுவனங்கள் ஈர்க்க முடியும்.
இதைவிட முக்கியமாக டெலாய்ட் இந்தியா மற்றும் நாஸ்காம் செய்த ஆய்வில் இடம்பெற்ற 26 நகரங்களில் இப்போது 140 ஜிசிசி அதாவது வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் அமைந்துள்ளது. இது வெறும் டிரைலர் தான், தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் வளர்ச்சி புதிய வரலாற்றை படைக்க உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications