கோவையில் இந்த பகுதிகளில் எல்லாம் ரியல் எஸ்டேட் உயரப் போகிறது!!

கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் ரீதியாகவும் கல்வி ,வேலை வாய்ப்பு ரீதியாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர் நகரத்திற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு இறுதி வடிவத்தை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக டாக்டர் கலாம் அறக்கட்டளையின் நிறுவனர் கிஷோர் சந்திரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக 1994 ஆம் ஆண்டில் தான் கோயம்புத்தூர் நகரத்திற்கான மாஸ்டர் பிளான் போடப்பட்டது. அதன் பிறகு கோயம்புத்தூர் நகரம் பல்வேறு மாற்றங்களை கண்டுவிட்டது. இந்த நிலையில் தொழில் துறையினரும் சமூக ஆர்வலர்களும் கோயம்பத்தூர் நகரத்தில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிகளுக்கு ஏற்ப புதிதாக மாஸ்டர் பிளான் போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோவையில் இந்த பகுதிகளில் எல்லாம் ரியல் எஸ்டேட் உயரப் போகிறது!!

இதனை ஏற்று தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் நகரத்திற்கான மாஸ்டர் பிளானிங்கை தயாரித்து இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு பொதுமக்களின் மதிப்பாய்வுக்காக வெளியிடப்பட்டது. அதன் மீது சுமார் 3,000 பேர் தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினர். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாஸ்டர் பிளானில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் தவிர மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கும் தனித்தனியாக மாஸ்டர் பிளான்கள் தயாரிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. இது தொடர்பாக உள்ளூர் திட்ட ஆணையம் தெரிவித்துள்ள தகவலில் இறுதி மாஸ்டர் பிளான் 15 நாட்களுக்குள் தயாராகி முதலமைச்சர் ஸ்டாலினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ்டர்ப் பிளான் அடிப்படையில் கோயம்புத்தூரில் சரவணம்பட்டி, காலாப்பட்டி, மலுமிச்சம்பட்டி, சூலூர் , கோவைப்புதூர், எல்&டி பைபாஸ் ஆகிய பகுதிகளில் தான் கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் கிஷோர் சந்திரன் தெரிவித்துள்ளார் . இங்கே பல்வேறு தொழில் பூங்காக்களும் ஐடி பூங்காக்களும் வர இருக்கின்றன என்றும் இந்த பகுதிகளில் எல்லாம் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு உச்சத்தை அடையும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மாஸ்டர் பிளான் வெளியானவுடன் தொழில் பூங்காக்களாக எந்த எட்டு பகுதிகள் மாறுகின்றன என்ற விவரம் நமக்கு தெரிய வரும் என்பதையும் அவர் கூறியுள்ளார். 2041 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மக்கள் தொகை 45 லட்சமாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இணைப்பு , ஐடி பூங்காக்கள், நவீன கட்டமைப்புகள் என பலவற்றையும் கவனத்தில் கொண்டு இது மதிப்பிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+