தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய மாவட்டமாக கோயம்புத்தூர் இருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரும் ஆரம்பக்கட்டத்திலேயே முதலீடு செய்து நீண்டக்கால அடிப்படையில் அதிகப்படியான லாபத்தை பெரும் திட்டத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய மாவட்டமாக கோயம்புத்தூர் இருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரும் ஆரம்பக்கட்டத்திலேயே முதலீடு செய்து நீண்டக்கால அடிப்படையில் அதிகப்படியான லாபத்தை பெரும் திட்டத்தில் உள்ளனர்.

2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்க, தொழில் சங்கத் தலைவர்கள், தொழிற்பேட்டை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருடன் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக வரும் மாதங்களில் 2,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளதை இக்கூட்டம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் 48 MSME நிறுவனங்கள் உடன் 571 கோடி ரூபாய் முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இக்கூட்டத்தில் கையெழுத்தானது.
புதிய துவக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான MSME கொள்கையின் மூலம் சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நன்மைகள் குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி விளக்கினார். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிப்காட், எல்காட், சிட்கோ என பல அமைப்புகள் புதிய தொழிற்சாலைகளை ஈர்க்க தேவையான வசதிகளையும், கட்டுமானங்களையும் செய்து வருகிறது. இது பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அடுத்தடுத்து ஐடி பார்க் கட்டுவதற்கான பணிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஐடி துறையில் முதலீடு குவிந்து வருவது தெரிந்த விஷயமாக இருந்தாலும், உற்பத்தி துறையில் 2000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குவியும் என கணிக்கப்படுவது பெரிய டிவிஸ்ட் ஆக உள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூரில் உற்பத்தி - சேவை துறை 50:50 அளவீட்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications