கோவை: கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த 154 கோடி ரூபாயை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒதுக்கியுள்ளது.
கோயம்புத்தூரில் சத்தியமங்கலம் சாலை பகுதியில் 1.1 கிலோமீட்டர் நீளத்திற்கு முதல் கட்டமாக மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்த 154 கோடி தேவைப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிமிடெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கூடிய விரைவில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் சிஎம்ஆர்எல் அமைப்பும் இணைந்து நிலம் தொடர்பான ஆய்வு பணிகளில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் உறுதி செய்யப்பட்டவுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
கோயமுத்தூர் எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அண்மையில் சென்னையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் அதற்கான நிலம் கையகப்படுத்துதல் திட்டத்திற்கான நிதி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது .முதல் மெட்ரோ காரிடார் என்பது கோயம்புத்தூரில் விமான நிலையத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வரை 20.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது .
இரண்டாவது மெட்ரோ ரயில் காரிடார் கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்திலிருந்து வாளியம்பாளையம் பிரிவு வரை அமைக்கப்படுகிறது. இது 14.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் டெக்ஸ்டூல் ரயில்வே பாலத்திலிருந்து சூர்யா ஹாஸ்பிடல் வரையிலான பகுதி மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் அங்கே ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டால் அங்கே இன்னும் நெரிசல் அதிகமாகும் என கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகிறார்.
இந்த சாலையை அகலப்படுத்துவதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் 54 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்திருப்பதாகவும் இதனை 3.1 கிலோமீட்டர் அகலம் கொண்ட சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் டெக்ஸ்டூல் மேம்பாலத்திலிருந்து சூரியா ஹாஸ்பிடல் வரையிலான பகுதியில் 24 மீட்டர் அகலம் கொண்ட நிலத்தை கையகப்படுத்தி கையகப்படுத்துவதற்காக சிஎம்ஆர்எல் சார்பாக 154 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விரிவான திட்ட அறிக்கை தயார் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வருவாய் துறை அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறைவு செய்த உடன் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும் என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications