தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான கோவை மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் நீண்ட சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வருகின்றன.
அந்த வகையில், மெட்ரோ ரயில் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். கோவையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கோவையில் 34.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்ட பணிகளுக்கான கூடுதல் விபரங்கள் மத்திய அரசுக்கு கொடுத்துள்ளதாகவும் இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்த மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து அதிகரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், கோவையில் 32 ரயில் நிலையங்கள் இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது என்றும், வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆரம்ப கட்ட பணிகளை துவங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த வகையில், 10 ஹெக்டேர்களை இரு வழித்தடங்களுக்கும், 16 ஹெக்டேர் ரயில் நிலையங்களுக்காக கையகப்படுத்த வேண்டி உள்ளது என்றும், கோவை நீலாம்பூரில் மெட்ரோ ரயில் டெப்போ அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவிநாசி வழித்தடத்தில் பணிகள் விரைவாக முடியும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்புதல்கள் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப் பெற்றதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிக்கப்படும்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையை விட கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக முடிவடைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.மேலும், கோவையில் நிலம் கையகப்படுத்த ஆயத்த பணிகளை துவங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மெட்ரோ திட்ட பணிகளுக்காக எங்கெல்லாம் நிலம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் எடுக்கப்படும் எனவும், நிலம் கையப்படுத்தும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்படும் எனவும், அவிநாசி வழித்தடத்தில் லீ மெரிடியன் ஹோட்டல் வரை வந்து விமான நிலையத்திற்கு திரும்புவது போல வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், வருங்காலத்தில் நீலாம்பூரை தாண்டி எல் அன்ட் டி சாலை வரை விரிவாக்கும் திட்டமும் உள்ளதாகவும், மேலும் மேட்டுப்பாளையம், திருச்சி ஆகிய சாலைகளில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தக்கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோவையில் புதியதாக வடிவமைத்து செயல்படுத்த உள்ளோம். நெடுஞ்சாலை துறை பணிகள், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகளை திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளோம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை 3 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதில் 750-க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications