தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த தொழில் நகரமான கோவை மாவட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளது. கோவை மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கான விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இதில் மொத்தமாக 34.8 கி.மீ தொலைவிற்கு ரூ.10740 கோடிக்கு அமையவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் அண்மையில் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதல் விரைவில் பெறப்பட்டு இந்த பணிகள் வேகமாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.

முதற்கட்டமாக, ஆரம்ப தளவாடங்கள் அமைக்கும் பணியானது அடுத்த ஜனவரியில் தொடங்குகிறது. இந்த பணி ஆனது உக்கடத்தில் தொடங்கி 18 ஸ்டேஷன்களை உள்ளடக்கி 20.4கி.மீ தொலைவிற்கு அமையவுள்ளது. அதில், உக்கடத்தில் தொடங்கி, டவுன்ஹால், ரயில்வே ஸ்டேசன், கலெக்டர் அலுவலகம் அதை தொடர்ந்து ஜிகேஎன்எம் மருத்துவமனை, லஷ்மி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு புதூர், ஃபன் ரிப்பப்ளிக் மால், ஹோப் காலேஜ், டைடல் பார்க் சிக்னல், சிஎம்சி/ கொடிசியா,சிட்ரா, எம்ஜிஆர் நகர், பிஎல்எஸ் நகர், வெங்கிட்டாபுரம்/சின்னியம்பாளையம், கோகுலம் பார்க்/லீ மெரிடியன், நீலாம்பூர் புதிய பேருந்து நிலையம், அதை தொடர்ந்து கோயம்புத்தூர் ஏர்போர்ட் உடன் 18 ரயில் நிலையங்கள் அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மெட்ரோ பணிகள் ஜனவரி 2025 முதல் தொடங்கப்படும் இந்த பணிகள் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. மொத்தமாக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை தொடர்ந்து வருங்காலத்தில் நீலாம்பூரை தாண்டி எல் அன்ட் டி சாலை வரை விரிவாக்கும் திட்டமும் உள்ளதாகவும், மேலும் மேட்டுப்பாளையம், திருச்சி ஆகிய சாலைகளில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தக்கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும்.
இதற்கிடையில், மெட்ரோ திட்ட பணிகள் எப்போது தொடங்கப்பட்டு எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் கோவை மக்கள் காத்துகிடக்கின்றனர். எனவே 2030 ஆம் ஆண்டிற்குள் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை ஒரு சிறந்த நகர்புற பயணத்தை கொண்டு சேர்க்கும் என்பதில் மாற்றமில்லை.


Click it and Unblock the Notifications