கோயம்புத்தூர் நீண்ட காலமாகச் செழிப்பான வர்த்தக சந்தையாக இருந்தாலும், கடந்த 5 வருடமாகத் தான் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகர்களுக்கும், முதலீட்டுச் சந்தைக்கும் தெரிய வந்துள்ளது. காலம் காலமாகக் கோவை - திருப்பூர் பகுதி தொழிற்துறை நிறைந்த பகுதி என்பதால் வேலைவாய்ப்புக்கும், மக்கள் மத்தியில் பணப்புழக்கத்திற்குக் குறைவில்லாமல் இருந்தது.
ஆனால் கொரோனா தொற்றுக்குப் பின்பு கோயம்புத்தூர்-க்கு வண்டிகட்டிக்கொண்டு வந்த ஐடி நிறுவனங்களால் ஆடம்பர ரீடைல் பிராண்டுகள் முதல் பிரபலமான வெளிநாட்டு பிராண்டுகள் வரையில் கோயம்புத்தூரில் தனது கடைகளைத் திறந்தது. இதன் விளைவாக இந்நகரில் கமர்சியல் ரியல் எஸ்டேட் டிமாண்ட் உயர்ந்தது மட்டும் அல்லாமல் ஆடம்பர பிராண்டுகளுக்கு முக்கிய சந்தையாகவும் மாறியது.

இந்த மாற்றத்தை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வந்த மால் கட்டுமான மற்றும் நிர்வாக நிறுவனமான ஃபீனிக்ஸ் மில்ஸ், கோவையில் பிரீமியம் ரீடைல் மால் அமைக்க நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. ஃபீனிக்ஸ் மில்ஸ் கொடுத்த தகவல் படி கோயம்புத்தூரில் high-end retail mall கட்டுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலத்தை நேரடியாக வாங்காமல் ஃபீனிக்ஸ் மில்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரீயா ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் பங்கு வாங்குதல் மற்றும் நேரடி நிலம் வாங்குதல் மூலம் இந்த நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக ஃபீனிக்ஸ் மில்ஸ் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபீனிக்ஸ் மில்ஸ், அஸ்ட்ரீயா நிறுவனத்தில் 67.1 சதவிகித பங்குகள் உள்ளது. நிலத்தின் அளவு மற்றும் அதற்காகச் செலுத்தப்பட்ட தொகையை இவ்விரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.
"கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலை, பீளமேடு மற்றும் காந்திபுரம் போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய அவினாசி சாலையில் தான் இந்த நிலம் நிலம் உள்ளது. நகரின் முக்கியமான பகுதியில் இந்த நிலம் அமைந்திருக்கும் காரணத்தால் அதிகப்படியான மக்களை ஈர்த்து விரைவான வளர்ச்சி அடைய முடியும் என்று ஃபீனிக்ஸ் மில்ஸின் எம்டி ஷிஷிர் ஸ்ரீவாஸ்தவ கூறினார்.
சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் பல்லாடியம் சென்னை ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஃபீனிக்ஸ் மில்ஸின் இரண்டாவது இடத்தில் மால் கட்ட உள்ளது.


Click it and Unblock the Notifications