இந்திய ஐடி சேவை துறையில் கொரோனா தொற்றுக்கு பின்பு பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நொய்டா ஆகிய முக்கிய மெட்ரோ நகரங்களுக்கு இணையாக கோயம்புத்தூர் மற்றும் நாட்டின் இதர 2ஆம் தர முக்கிய நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதில் முக்கியமாக கோயம்புத்தூர் இதுநாள் வரையில் உற்பத்தி துறையில் அதிகப்படியான எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் உடன் வளர்ச்சி அடைந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்பு சென்னையின் ஐடி வளர்ச்சியை பங்குபோடும் மாவட்டமாக மாறியது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களை அதிகளவில் ஈர்க்கும் பகுதியாக மாறியது.

கோயம்புத்தூர் பொருத்த வரையில் பெரு நகரங்களை காட்டிலும் ரியல் எஸ்டேட் செலவுகள் மிகவும் குறைவு, கோயும்புத்தூர் சுற்றியுள்ள முன்னணி கல்லூரிகள் வாயிலாக ஐடி நிறுவனங்களுக்கு தேவையான திறன்வாய்ந்த ஊழியர்களை மிகவும் எளிதாக பெற முடியும் என்பதால் ஐடி ஊழியர்களுக்கு முக்கிய டார்கெட்டாக மாறியது கோயம்புத்தூர்.
இதோடு ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு மிகவும் அருகில் இருக்கும் காரணத்தால் நீண்ட கால அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு பெருவதால் வெளியூரில் இருக்கும் மக்களும் கோயம்புத்தூர் பக்கம் திரும்ப முடிவு செய்து திரும்ப துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் கோயம்புத்தூரில் இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசென்ட், விப்ரோ, போன்ற பெரு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் நடுத்தர மற்றும் சிறு ஐடி சேவை நிறுவனங்கள கோயம்புத்தூர் பக்கம் படையெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கோயம்புத்தூர்-க்கு வரும் நிறுவனங்களுக்கு குறிப்பாக டெக் நிறுவனங்களுக்கு போதுமான இடவசதி உருவாக்க அரசு மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடி உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் ELCOT அமைப்பு கோயம்புத்தூரில் ஏற்கனவே 2 ஐடி பார்க் கட்டமைத்திருக்கும் வேளையில் சமீபத்தில் புதிய மற்றும் அதிநவீன ஐடி பார்க் டவர் அமைப்பதாக அறிவித்தது. இந்த புதிய ஐடி டவர் கோயம்புத்தூர் ELCOT PARK-ல் சுமார் 1 மில்லியன் சதுரடி அதாவது 10 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தனியார் துறையில் கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான ரத்தினம் டெக் சோன் தனது அலுவலக கட்டுமான இடத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. SPAN Venture SEZ நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே டெக் பார்க் வைத்துள்ள இடத்தில் 1.5 லட்சம் சதுரடி அளவிலான அலுவலகத்தை அமைக்கும் விரிவாக்க பணிகளை தற்போது துவங்கியுள்ளது.
இதேபோல் KGISL SEZ பகுதியில் IndiaLand Tech Park தனது 3வது கட்ட விரிவாக்க பணிகளை படுவேகமாக செய்து வருகிறது. 3வது கட்ட பணிகள் மூலம் இந்தியா லேண்ட் டெக் பார்க் சுமார் 4 லட்சம் சதுரடி கொண்ட அலுவலக இடம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் 2வது ELCOT ஐடி டவர் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான காசா கிராண்டே நவஇந்தியா பகுதியில் 90,000 சதுரடி கொண்ட Casagrand Crown என்ற வர்த்தக அலுவலக கட்டிடத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது. இந்த கட்டிடம் 2 பேஸ்மென்ட் தளம், கிரவுண்ட் ஃப்லோர், 7 மாடி என பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications