கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நடுத்தர மற்றும் கீழ்நிலை நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் கோயம்புத்தூரில் நிலத்தின் விலை மற்றும் வீட்டு கட்டுமான செலவுகள் வேகமாக உயர்ந்துள்ளதால், 'வீடு' என்ற அடிப்படை தேவையே பலருக்கு எட்டாத விஷயமாக மாறியுள்ளது.
பொதுவாக இதுப்போன்ற நிலை மெட்ரோ நகரங்களில் நடப்பது இயல்பு தான், மெட்ரோ நகரங்களிலும் புறநகர் பகுதியில் சற்று மலிவாக இருக்கும். ஆனால் கோயம்புத்தூர் போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இதுப்போன்ற விஷயம் நடப்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

நிலத்தின் விலை உயர்வு:
2022 முதல் 2026 வரையிலான காலத்தில் அதாவது 3-4 ஆண்டுகளில் கோயம்புத்தூரின் முக்கிய பகுதிகளில் நிலத்தின் விலை இரட்டிப்பாகியுள்ளது. இதில் முக்கியமாக சரவணம்பட்டி, கலப்பட்டி, விலாங்குறிச்சி போன்ற IT மற்றும் தொழிற்துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்களில், ஒரு சதுர அடிக்கு ரூ.3,000-ரூ.4,000 அளவில் இருந்த விலை இன்று ரூ.6,000-ரூ.8,000 வரை உயர்ந்துள்ளது.
அதேபோல் கோவைபுதூர், பேரூர், சுண்டக்காமுத்தூர் போன்ற புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நகர மையத்தைத் தாண்டி புறநகர பகுதிகளும் இனி 'மலிவு' என்ற நிலை மாறியுள்ளது.
அபார்ட்மென்ட் சந்தை:
கோயம்புத்தூரில் தற்போது அபார்ட்மென்ட் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. தற்போது 2BHK வீடுகள் ரூ.70 லட்சம் முதல் ரூ.95 லட்சம் வரை ஆரம்பமாகின்றன. சரவணம்பட்டி மற்றும் கலப்பட்டி பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.6,000-ரூ.8,500 வரை விலை உள்ளது. நகர மையம் மற்றும் அவிநாசி சாலை பகுதிகளில் இது ரூ.8,000-ரூ.12,000 வரை சென்றுள்ளது.
மேலும், வீடுகளின் பயன்பாட்டு பரப்பளவு 600-800 சதுர அடியாக குறைந்து வருகிறது. அதாவது, அதிக விலை கொடுத்து வாங்கும் வீடுகள் சிறியதாக மாறி வருகின்றன.
தனி வீடு கட்டும் செலவு:
புறநகர் பகுதியில் 1200 சதுர அடி நிலம் வாங்குவதற்கே ரூ.50-ரூ.80 லட்சம் செலவாகிறது. இதற்கு மேலாக கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.2,200-ரூ.3,000 வரை உள்ளது. இதனால், ஒரு சாதாரண தனி வீடு கட்டுவதற்கே ரூ.1-ரூ.1.4 கோடி வரை செலவாகிறது.
இதனால், தனி வீடு என்பது இப்போது நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு Luxury பொருளாக மாறியுள்ளது.
வருமானம் vs சொத்து விலை:
சமீப காலமாக இந்தியாவில் பெரும்பாலான துறைகளில் சம்பள உயர்வு என்பது ஆண்டுக்கு 5-8% மட்டுமே இருக்கும் நிலையில், நிலம் மற்றும் வீட்டு விலைகள் 12-20% வரை உயர்ந்து வருகின்றன. இந்த வேகத்தில் இருக்கும் வேறுபாடு காரணமாக, மக்கள் மத்தியில் வீடு வாங்கும் திறன் குறைந்து வருகிறது.
இதன் விளைவாக, வீடு வாங்குவோரின் வயது வரம்பு அதிகரித்துள்ளது, பலர் நகரத்தின் வெளிப்புற பகுதிகளுக்கு தள்ளப்படுகின்றனர். வாடகை வீடுகளில் வாழும் நிலையும் அதிகரித்து வருகிறது.
சமூக மற்றும் பொருளாதார தாக்கம்
இந்த நிலைமை ஒரு சாதாரண ரியல் எஸ்டேட் வளர்ச்சி அல்ல இது ஒரு கட்டமைப்பு அடிப்படையிலான நெருக்கடி (affordability crisis). நிலம் வைத்திருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் மத்தியில் செல்வத்தில் பெரும் இடைவெளி அதிகரித்து வருகிறது.
இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?
இந்த பிரச்சனைக்கு தீர்வாக, நகரத்தின் மேற்குப் பகுதி மற்றும் தெற்கு பகுதிகளில் திட்டமிட்ட விரிவாக்கம் அவசியமாகிறது. மேலும், நில விலை ஊக அடிப்படையில் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், மலிவு வீடுகள் உருவாக்க ஊக்குவிப்புகள், மற்றும் பொதுப் போக்குவரத்து மேம்பாடு ஆகியவை மிக முக்கியமானவை.
கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சாதகமான விஷயம் தான். ஆனால் இந்த வளர்ச்சி மக்கள் மத்தியில் சமநிலையின்றி தொடர்ந்தால், நடுத்தர வர்க்கம் நகர வளர்ச்சியில் பின்தங்கும் அபாயம் உருவாகும்.
More From GoodReturns

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications