கோயம்புத்தூரை சேர்ந்த Tanny Shelters என்னும் ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனம், நகரம் முழுவதும் உருவாகி வரும் புதிய ஐடி பார்க்களுடன் ஒரு புதிய மேஜிக் செய்ய உள்ளது. Tanny Shelters நிறுவனம் ஏற்கனவே கோவையின் முக்கிய பகுதியில் ஒரு ஐடி பார்க் கட்டி வரும் வேளையில் 2வது திட்டத்தை அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பிரம்மாண்டமாக சுமார் 7,00,000 சதுரடி ஐடி பார்க் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது கோயம்புத்தூரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். கோவை நகரத்தில் உருவாகியிருக்கும் அதிகப்படியான அலுவல இடத்திற்கான டிமாண்ட்-ஐ பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tanny Shelters, கோயம்புத்தூரில் பல வெற்றிகரமான ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த புதிய IT Park-ல், நகரத்தின் தொழில்நுட்ப துறையை மேலும் வலுப்படுத்தும். இந்த ஐடி பார்க்கில் ஸ்டார்ட்அப் முதல் பெரும் டெக் நிறுவனங்களுக்கு சேவையான அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் தொழில் நகரமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூரில் IT துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், Tanny Shelters நிறுவனம் ஏற்கனவே சரவணம்பட்டி அருகே சத்தி ரோட்டில் புதிய ஐடி பார்க்கை அமைத்து வருகிறது.
கோவை பாரம்பரியமாக பருத்தித் துணி தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது என்றாலும், சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக, கோவையில் அலுவலக இடங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Tanny Shelters நிறுவனத்தின் சரவணம்பட்டி ஐடி பூங்கா திட்டம், 12 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டிடங்களைக் கொண்டிருக்கும். மொத்த பரப்பளவு 3.5 லட்ச சதுர அடியாக இருக்கும். கோவை, சென்னை, பெங்களூருவை அடுத்து டெக் நிறுவனங்களுக்கு விருப்பமான இடமாக மாறி வருகிறது. இந்த புதிய ஐடி பூங்கா, கோவையின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.


Click it and Unblock the Notifications