சென்னையை காலி செய்யும் கோவை.. ஐடி துறையில் அசுர வளர்ச்சி.. ஆனால் பிரச்சனையே இதுதான்..!!

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஐ.டி. மையமாக கோவை மாவட்டம் உருவெடுக்கும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.10,433 கோடியாக இருந்த தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சாஃப்ட்வேர் ஏற்றுமதி, 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.1,553 கோடி அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது ரூ.11,986.8 கோடியாக உள்ளது.ஆனாலும், போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், கோவையின் ஐடி துறை முழுமையான வளர்ச்சியை அடைவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து கேஜிஐஎஸ்எல் (KGISL) குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அசோக் பக்தவச்சலம் கூறுகையில், "கோவையில் தரம் வாய்ந்த என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைப் பெற்ற கல்லூரிகள் இருக்கின்றனர். இதனால், திறமையான பணியாளர்களை இங்கிருந்து எளிதில் பெற முடியும். மேலும், தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இங்கு வேலை செய்ய விரும்புகின்றனர். எனவே, ஐடி நிறுவனங்கள் கோவையில் செயல்பட மிக சிறந்த இடமாக அமைகிறது" என்று கூறியுள்ளார்.

சென்னையை காலி செய்யும் கோவை.. ஐடி துறையில் அசுர வளர்ச்சி.. ஆனால் பிரச்சனையே இதுதான்..!!

தொடர்ந்து அவர் பேசுகையில், "மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. ஆனால், உள்கட்டமைப்பு மேம்பாடு சரியாக இருந்திருந்தால், கோவை நகரம் சென்னையை கடந்து சென்றிருக்கும். இங்கு விமான நிலைய விரிவாக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். கோவையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை இல்லாததால், 10 முதல் 20 உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) கோவையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். எனவே, சர்வதேச தொடர்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், இந்தியா லேண்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாலை குமரன் கூறுகையில், "அசென்ச்சர், டெலாய்ட் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்கள் இருப்பை அதிகரித்துள்ளன. ஆகையால், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கோவையின் ஐடி துறைகள் மீதான ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றும் கூட ஐடி இடங்களுக்கான விசாரணைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் வாடிக்கையாளர்களின் தேவைகளை எங்களால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ​​"இந்த நகரம் மழை அல்லது அதிக வெப்பத்தால் பாதிக்கப்படாமல், வருடத்தின் 365 நாட்களும் செயல்படக்கூடிய சூழலைக் கொண்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரை ஒப்பிடுகையில், கோவையில் வாழ்க்கை செலவும் குறைவாகவே உள்ளது" என்று குறிப்பிட்டார். இருப்பினும், சரவணம்பட்டி மற்றும் கீரநத்தம் போன்ற ஐடி மையங்களில் சாலை வசதி மேம்படுத்தப்படாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் சென்னை, பெங்களூரு மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள அதே நெரிசல் சிக்கல்களை கோவையும் எதிர்கொள்ளும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கேஜிஐஎஸ்எல் எஸ்.இ.இசட். துணைத் தலைவர் ஆர். மகேஸ்வரன் கூறுகையில், "கோவையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கும் வெளிப்புற சாலைத் திட்டம் முடிக்கப்பட்டால், நகரின் நெரிசல் குறையும்" என்று கூறினார்.

அதேபோல், நாஸ்காம் (NASSCOM - TN) பிராந்திய கவுன்சில் உறுப்பினர் நித்தி கலைச்செல்வன் கூறுகையில், "கோவையில் ஐடி பூங்காக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டாலும், இரவு 11 மணிக்கு மேல் உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. விமான நிலையம் அதிக பயணிகளை கையாண்டாலும், விரிவாக்கம் மற்றும் அதிக விமான சேவை அத்தியாவசியமானது" என்று குறிப்பிட்டார்.

அத்துடன், ஐடி துறையை தாண்டி உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கும் ஊக்கமளிக்கவும், எஸ்.இ.இசட். வரிச் சலுகைகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+