இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பது போலவே உலகளவிலும் உள்ளது, சர்வதேச டிமாண்ட்-ஐ பூர்த்தி செய்யும் அளவுக்கு எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி பேக் தயாரிக்கும் திறன் இல்லாத காரணத்தால் இப்பிரிவில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதனால் ஆட்டோமொபைல் துறையில் தற்போது புதிய நிறுவனங்களுக்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியிருக்கும் வேளையில், யார் முதலில் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு ஜாக்பாட். இந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நுழைந்து வருகிறது.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனமான AR4 டெக், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்காக சோடியம் அயன் பேட்டரி பேக்குகளை தயாரிக்க சிங்கப்பூரின் சோடியன் எனர்ஜி (Sodion Energy) என்னும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
சோடியன் எனர்ஜியின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.பாலா இதுகுறித்து கூறுகையில் AR4 டெக் அடுத்த நான்கு மாதங்களில் கோயும்புத்தூரில் சுமார் 15,000 சதுர அடி தொழிற்சாலையில் சோடியம் அயன் பேட்டரி பேக்குகளை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.
பொதுவாக எலக்ட்ரிக் கார்கள் லித்தியம் அயன் பேட்டரியை தான் பயன்படுத்தும், ஆனால் லித்தியம் உற்பத்தி முறை மற்றும் அதன் விலை ஆகியவை கார்களின் விலையை பெரிய அளவில் உயர்த்துகிறது. இந்த நிலையில் லித்தியம் உலோகத்திற்கு மாற்று உலோகம், பேட்டரி தயாரிப்பு முறையை பல அமைப்புகள், நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகிறது. இதில் ஒரு மாற்று தீர்வு தான் சோடியம் அயன் பேட்டரி.
தற்போதுள்ள பெட்ரோலிய வாகனங்களை (முக்கியமாக இரு சக்கர வாகனங்கள்) மின்சார வாகனங்களாக மாற்ற AR4 டெக் பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்தும். இந்த பேட்டரி பேக்குகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரி பேக்குகளை தடையில்லா மின்சாரம் வழங்கும் அமைப்புகளுக்கும் பயன்படுத்த முடியும்.

தற்போதுள்ள பெட்ரோலிய வாகனங்களை (முக்கியமாக இரு சக்கர வாகனங்கள்) மின்சார வாகனங்களாக மாற்ற AR4 டெக் பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்தும். இந்த பேட்டரி பேக்குகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரி பேக்குகள் தடையில்லா மின்சாரம் வழங்கும் அமைப்புகளுக்கும் பயன்படுத்த முடியும்.
சோடியம் அயன் பேட்டரி பேக்குகளை தயாரிக்க இந்தியாவில் இன்னும் தரம் அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை என சோடியன் எனர்ஜியின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.பாலா தெரிவித்துள்ளார். "சாதகமான ஒழுங்குமுறை சூழல்" தேவைப்படும் வளர்ந்து வரும் துறையாக சோடியம் அயன் பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications