கோயம்புத்தூர் முக்கிய ஐடி நகரமாக வளர்ந்து வரும் வேளையில் ஏற்கனவே இருக்கும் ஐடி பார்க்-ன் சுற்றியுள்ள பகுதியை மேம்படுத்த புதிய டென்டர் வெளியிடப்பட்டு உள்ள வேளையில், 2வது IT பார்க்-ன் கட்டுமான பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் ELCOT 3வதாக மாபெரும் ஐடி பார்க் கட்டும் திட்டத்தை முன்வைத்து ஒட்டுமொத்த கோயம்புத்தூர் ஐடி துறையினரையும், ஐடி ஊழியர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடி உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் ELCOT கோயம்புத்தூரில் புதிய மற்றும் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஐடி டவர் அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஐடி டவர் கோயம்புத்தூர் ELCOT PARK-ல் சுமார் 1 மில்லியன் சதுரடி அதாவது 10 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்கும் வரையில் புதிய ஐடி டவர் 10 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக ELCOT அறிவித்துள்ளது. இதற்காக சென்னையில் ஜூலை 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்க இருக்கும் கூட்டத்தில் இந்த ஐடி டவரின் குத்தகைக்கு வர விருப்பம் உள்ள ஐடி, ஐடீஸ், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாபெரும் ஐடி பார்க் PPP மோட் அதாவது தனியார் கூட்டணி உடன் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூரில் தற்போது
2வது IT டவர் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருக்கும் வேளையில் வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. கோயம்புத்தூர் 2வது IT பார்க் 2.66 லட்சம் சதுரடியில் சுமார் 114.16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு உள்ளது.
இந்திய ஐடி சேவை துறைக்கு பெங்களூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய முக்கிய மெட்ரோ நகரங்களுக்கு இணையாக கோயம்புத்தூர் முக்கிய வர்த்தக நகரமாக மாறியுள்ளது.
கோயம்புத்தூரை பொருத்த வரையில் பெரு நகரங்களை காட்டிலும் ரியல் எஸ்டேட் செலவுகள் மிகவும் குறைவு, இதேபோல் கோயம்புத்தூரை சுற்றியுள்ள முன்னணி கல்லூரிகள் வாயிலாக ஐடி நிறுவனங்களுக்கு தேவையான திறன்வாய்ந்த ஊழியர்களை பெற முடியும், இதோடு ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு மிகவும் அருகில் இருக்கும் காரணத்தால் நீண்ட கால அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.
இதனாலேயே உள்நாட்டு டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் நேரடியாக கோயம்புத்தூரில் தங்களுடைய அலுவலகத்தை திறந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் ELCOT புதிய ஐடி டவர் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications