கோயம்புத்தூர் மக்களே இனி தினமும் ஜாலி தான்! போன வருஷம் மார்ச் மாசம் ஸ்டார்பக்ஸ் இந்தியாவின் 400-வது கடைய பெருமையுடன் நம்ம கோயம்புத்தூரில் திறந்தது ஞாபகம் இருக்கா? யாரும் மறந்திருக்க மாட்டோம், ஒட்டுமொத்த கோயம்புத்தூர் யூத் பசங்களும் வரிசை கட்டி நின்னு காஃபி வாங்குன வீடியோவும், போட்டோவும் இன்னும் சோஷியல் மீடியாவுல சுத்திக்கிட்டு தான் இருக்கு.
இப்ப விஷயம் என்னன்னா, கோயம்புத்தூருக்கு இன்னும் ரெண்டு ஸ்டார்பக்ஸ் காஃபி ஷாப் வரப்போகுது! ஏற்கனவே ஒரு கடை போட்டு கலக்கிட்டு இருக்கும் டாடா ஸ்டார்பக்ஸ், இப்போது அவங்களோட ரெண்டாவது மற்றும் மூணாவது கிளைகளை கோயம்புத்தூர் நகரின் முக்கிய பகுதியில் திறக்க போறாங்களாம். இதுக்குறித்து முழுமையான விபரத்தை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

டாடா ஸ்டார்பக்ஸ் திறக்கப்போகும் 2 புதிய கடைகளில் ஒன்று சாய்பாபா காலனியிலும், பிரபலமான புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் மற்றொரு கடையும் அமைக்கப்பட உள்ளது. இந்த இரண்டு கடைகளுக்குமான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூரில் சாய்பாபா காலனி எப்பவுமே பரபரப்பா இருக்கும் ஏரியாக்களில் ஒன்று. அங்க ஸ்டார்பக்ஸ் வந்தா சொல்லவா வேணும்? இளசுகளும் சரி, வயசானவங்களும் சரி, எல்லாரும் வரிசை கட்டி நிற்க போறாங்க.
இதேபோல் கோயம்புத்தூரிலேயே பெரிய மால்களில் ஒன்றான புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் 3வது கடை வரப்போகுது. சும்மாவே இந்த மாலில் கூட்டம் அள்ளும், இதை டார்கெட் செய்தே தற்போது டாடா ஸ்டார்பக்ஸ் தனது 3வது கடையை திறக்க உள்ளது.
கோயம்புத்தூரின் முதல் கடையும், இந்தியாவின் 400வது கடையும் கோவையில் திறக்கப்பட்டது என்பதை விட அது எங்கு திறக்கப்பட்டது என்பது தனி சிறப்பு. கோவை, திருப்பூர் பகுதியில் முக்கிய வர்த்தகமாக இருக்கும் டெக்ஸ்டைல் மற்றும் நூல் தயாரிப்பில் முன்னோடியாக இருந்த ஒரு நிறுவனம் தான் லட்சுமி மில்ஸ்.
கோவை மையப்பகுதியில் இருக்கும் லட்சுமி மில்ஸ்-ஐ புதுப்பிக்கும் வகையிலும், அதிகப்படியான மக்களுக்கும், இன்றைய காலக்கட்டத்திற்கும் பயன்படுத்தும் விதமாக இத்தொழிற்சாலை இருந்த பகுதியை வணிக வளாகமாக மாற்றப்பட்டது. இதை சரியாக பயன்படுத்தும் விதிமாக டாடா ஸ்டார்ப்க்ஸ் தனது கடையை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் திறந்தது.
கோயம்புத்தூரின் அடையாளமாக இருக்கும் லட்சுமி மில்ஸ் வளாகத்தில், ஸ்டார்பக்ஸ் வந்தது அதிகப்படியான மக்களை கவனிக்க வைத்தது. அந்த ஒரு கடைக்கே நம்ம ஊரு மக்கள் கூட்டம் கூட்டமா போய் காஃபி குடிச்சாங்க. இப்போ இன்னும் 2 புதிய கடை கோயம்புத்தூர்க்கு வரப்போகுது.
டாடா ஸ்டார்பக்ஸ் கடந்த 2 வருஷமா நாட்டின் 2ஆம் கட்ட நகரங்களில் அதிகளவிலான கடைகளை திறந்து வந்தது, அப்படி தான் முதல் கடையை கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு திறந்தது. இதை பலரும் பாராட்டியது மட்டும் அல்லாமல் கோயம்புத்தூர் நகரின் ராக்கெட் வேக வளர்ச்சி இது முக்கியம் என்று பலரும் கூறினர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஒரே வருஷத்துல இன்னும் ரெண்டு கடையை டாடா ஸ்டார்ட்பக்ஸ் திறக்கப் போகிறது. பொதுவா ஸ்டார்பக்ஸ் காஃபி கொஞ்சம் காஸ்ட்லியா இருந்தாலும், அதோட டேஸ்ட்டும், அங்க இருக்குற அமைதியான சூழ்நிலையும் நிறைய பேருக்கு பிடிக்கும். இது காஃபி ஷாப் என்பதை தாண்டி இளசுகளின் ஹேங்அவுட் ஸ்பாட் ஆகவே இருக்கிறது.
இனிமே கோயம்புத்தூர்ல ஸ்டார்பக்ஸ் காஃபி குடிக்கணும்னா புதுசா ரெண்டு இடத்துக்கு போலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications