கோயம்புத்தூர் நகரின் தொழில்நுட்பக் கட்டமைப்பு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது, ஏற்கனவே நகரின் முக்கிய பகுதிகளில் அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் வேளையில் தற்போது புறநகர்ப் பகுதியில் பெரிய அளவிலான டெக் பார்க் மற்றும் ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் தினமும் ஒரு புதிய நிறுவனம் கோயம்புத்தூரில் அலுவலகத்தை சிறியதாகவோ அல்லது பெரியதாகவே துவங்கி வருகிறது.
இப்படி நாள்தோறும் அதிகரித்து வரும் ஆபீஸ் ஸ்பேஸ் டிமாண்ட்-ஐ புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக இடங்களை மொத்தமாக ஈர்க்க உள்ளது. தற்போது கோயம்புத்தூரில் பல அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தாலும், பலரையும் ஆச்சரியப்படுத்துவது பெரிய திட்டங்கள் தான். இப்படி கோவை மாநகரில் 1 மில்லியன் சதுர அடிக்கும் (மில்லியன் சதுர அடிக்கும்) அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அலுவலக திட்டங்கள் இதுதான்.

நீலாம்பூரில் ஒன் கேபிஆர் (One KPR). இது 2.4 மில்லியன் சதுர அடிக்கும் பரப்பளவில் உருவாக உள்ளது. இது இப்பகுதியில் ஒரு பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது. அதேபோல, துடியலூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வின்ஃப்ரா சைபர் சிட்டி (Wynfra Cyber City) 1.9 மில்லியன் சதுர அடிக்கும் பரப்பளவில் உருவாக்கப்பட்டு, நகரத்தின் வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலுக்கு பெரும் பங்களிப்பை அளிக்க உள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த முக்கிய திட்டமாக மலுமிச்சம்பட்டி-யில் அமைந்து வரும் எல்&டி தொழில்நுட்ப பூங்கா (L&T Tech Park) 1.8 மில்லியன் சதுர அடிக்கும் பரப்பளவில் உருவாகி, கோயம்புத்தூரை வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமாக உள்ளது.
ஒட்டுமொத்த கோயம்புத்தூரிலேயே மிகப்பெரிய டெக் பார்க் ஆக உருவாகி வருவது டெக் சிட்டி கோயம்புத்தூர் (Tech City Coimbatore). இது 5 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவை நகரின் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் துறை வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெரிய அளவிலான திட்டங்களின் லிஸ்ட்டில் எஸ்விபி டெக் பார்க் (SVB Tech Park) 1 மில்லியன் சதுர அடிக்கும் பரப்பளவிலும், எல்காட் செயற்கை நுண்ணறிவு பூங்கா (ELCOT AI Park) 2 மில்லியன் சதுர அடிக்கும் பரப்பளவிலும் உருவாக உள்ளன. எல்காட் செயற்கை நுண்ணறிவு பூங்கா செயற்கை நுண்ணறிவு துறையில் முழுமையாகக் கவனம் செலுத்தும் ஒரு பிரத்தியேக டெக் பார்க் ஆக இருக்கப்போகிறது.
கூடுதலாக, இந்தியா லேண்ட் டெக் பார்க் (India Land Tech Park) 1.7 மில்லியன் சதுர அடிக்கும் பரப்பளவில் உருவாகி வருகிறது. இதேபோல் டேனி ஷெல்டர்ஸ் 2 திட்டம் 1.1 மில்லியன் சதுரடியில் கட்டப்பட்டு வருகிறது. இது வெறும் கட்டிடங்களும், கட்டுமான துறையின் வளர்ச்சி மட்டுமல்ல, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) ஈர்க்கும் இடமாகக் கோயம்புத்தூர் நிலையை உயர்த்தும் முக்கிய வளர்ச்சி திட்டங்களாகும்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications