தமிழ்நாட்டில் வேகமாக வளரும் மாவட்டத்தில் முக்கியமானதாகவும், சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொண்டு இருக்கும் மாவட்டமாக கோயம்புத்தூர் விளங்குகிறது. இதனாலேயே ரியல் எஸ்டேட் முதல் வர்த்தகர்கள் என ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் தற்போது கோயம்புத்தூர் பக்கம் திரும்பியுள்ளது.
பொதுவாக கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் உற்பத்தி, ஏற்றுமதி தான் முக்கிய வர்த்தகமாக இருக்கும், ஆனால் அடுத்த சில வருடத்தில் ஐடி துறை தான் கோயம்புத்தூரின் முக்கிய வர்த்தக துறையாக இருக்கும். கடந்த 2 வருடத்தில் குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பின்பு கோயம்புத்தூரில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஐடி துறை வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக இருக்கும் கோயம்புத்தூர் டைடல் பார்க் ஸ்டைலாக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் டைடல் பார்க் புத்துயிர் பெற உள்ளது.
கோயம்புத்தூர் டைடல் பார்க் சாலைகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் முக்கிய டென்டர் வெளியிடப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ள டென்டரில் சுமார் 783.60 மீட்டர் சாலை ரீடெவலப்மென்ட் செய்ய 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான டென்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த டென்டரில் சாலை மட்டும் அல்லாமல் மழைநீர் வடிகால், பென்ட், தோட்டம், தெருவிளக்குகள், சாலை நடுவில் இருக்கும் தடுப்புகள், நடைபாதைகள் ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என்றாலும், இதில் 40 லட்சம் ரூபாய் தொகை நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் கொடுத்த நிதியுதவிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications