தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி மாநிலமாகும். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் இருந்து ஜவுளித் தொழில் முதலீட்டாளர்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இது தொழில்துறையினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகப்படியான டெக்ஸ்டைல் உற்பத்தி கொண்ட மாவட்டங்கள் என்றால் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகியவை தான். தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் துறையினரின் இந்த இடப்பெயர்விற்கு பல காரணங்கள் உள்ளன என இத்துறையை சார்ந்தோர் அடுக்கியுள்ளனர்.

முதலாவதாக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள், ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை வழங்குகின்றன. இதில் முக்கியமாக இந்த மாநிலங்களில் ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருள் (பருத்தி) எளிதாகக் கிடைக்கிறது, மின் கட்டணம் குறைவாக உள்ளது, மற்றும் தொழிலாளர் சம்பளம் குறைவாக உள்ளது.
இரண்டாவதாக, தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்து வருகிறது. 2023-24 நிதியாண்டில், தமிழகத்தில் மின் கட்டணம் 20% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜவுளித் தொழிலின் உற்பத்தி செலவுகளை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர்கள் விலை குறைவான பொருட்களை வாங்க வேண்டும் என திட்டமிடும் போது வட மாநிலத்தில் இருந்து வாங்குகின்றனர். இதனால் ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் போட்டித்தன்மை குறைந்து வர்த்தகத்தையும் இழந்து வருகிறது.
மூன்றாவதாக, தமிழகத்தில் மூலப்பொருள் (பருத்தி) பற்றாக்குறை உள்ளது. தமிழகம், இந்தியாவின் முக்கிய பருத்தி உற்பத்தி மாநிலமாக இருந்தாலும், தற்போது மாநிலத்தின் உற்பத்தி தேவைக்கு குறைவான அளவிலேயே பருத்தி உற்பத்தி அளவு உள்ளது.
இதனால், தமிழக ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மூலப்பொருளை பிற மாநிலங்களிலிருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பிற மாநிலங்களிலிருந்து அதிக விலைக்கு வாங்குவது மட்டும் அல்லாமல் போக்குவரத்து செலவுகளின் சுமையும் உள்ளது.
நான்காவதாக, தமிழகத்தில் தொழிலாளர் சம்பளம் அதிகமாக உள்ளது. டெக்ஸ்டைல் துறையில் தொழிலாளர் சம்பளம் என்பது உற்பத்திச் செலவில் ஒரு முக்கிய பகுதியாகும். தமிழகத்தில் தொழிலாளர் சம்பளம் அதிகமாக இருக்கிறது, வடமாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றினாலும் அவர்களுக்கான சம்பளமும் அதிகமாக தான் உள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றும் வடமாநிலத்தவர்களின் சம்பளம் கிட்டத்தட்ட 1.5 முதல் 2 மடங்கு அதிகமாகும
இந்த காரணிகள் அனைத்தும் தமிழகத்தில் டெக்ஸ்டைல் துறையை போட்டியற்றதாக மாற்றுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தமிழகத்தில் உள்ள 30 சதவீத ஜவுளி ஆலைகள் அடுத்த 3 ஆண்டுகளில் மூடப்படும் என்று எச்சரித்துள்ளார் தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜூ.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications