கோயம்புத்தூரில் நடைபெற்ற டி.என் ரைசிங் முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகளை அறிவித்துள்ளனர். சென்னை, பெங்களூருக்கு இணையாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது.
TN Rising Summit இதற்கு முன்பு தூத்துக்குடி, ஓசூர் ஆகிய நகரங்களில் நடந்த நிலையில், இன்று கோயம்புத்தூரில் நடந்துள்ளது. அடுத்தாக மதுரையில் நடக்க உள்ளது.

செமிகண்டக்டர் துறை
செமிகண்டக்டர் உபகரண உற்பத்தியில் கோயம்புத்தூர் பிள்ளையார் சுழிபோடும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக செமிகண்டக்டர் உபகரணங்கள் தயாரிக்கும் பெரிய திட்டங்கள் கோயம்புத்தூருக்கு கிடைத்துள்ளன. காலிபர் இன்டர்கனெக்ட் (Caliber Interconnect)நிறுவனம் சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கவுள்ளது.
இதைதொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த மைண்டாக்ஸ் டெக்னோ (Mindox Techno) நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் 460 பேருக்கு வேலை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்குகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த யீல்ட் இன்ஜினியரிங் (Yield Engineering) நிறுவனமும் 50 கோடி ரூபாய் முதலீடு செய்து 100 பேருக்கு வேலை தரவுள்ளது. இந்த மூன்று திட்டங்களும் கோயம்புத்தூரை செமிகண்டக்டர் தொழில் துறையில் நுழை. மையமாக உருவாக்கும்.
மருத்துவத் துறை
கோவையை சேர்ந்த கே.ஜி ஹெல்த்கேர் நிறுவனம் கோயம்புத்தூரில் 1,000 கோடி ரூபாய் செலவில் புதிய பல்துறை சிறப்பு மருத்துவமனை வளாகம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 5000 மேற்பட்டோருக்கு நேரடி வேலை கிடைக்கும். நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை நகர மக்களுக்கு பெரும் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து மற்றும் டிரோன்
கோயம்புத்தூரை அடுத்த திருப்பூரில் சக்தி குழுமம் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு மற்றும் நான்கு இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே இது முதல் முயற்சி என்பதால் தேசிய அளவில் கவனம் பெறுகிறது. இதன் மூலம் 1,200 பேருக்கு வேலை உருவாகும்.
ஜெர்மனியைச் சேர்ந்த போவியா டெக் நிறுவனம் (Fovia Tech) 200 கோடி ரூபாய் செலவில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 1,200 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து வி.ஏ.எஃப் ஏரோசிஸ்டம் நிறுவனம் 501 கோடி ரூபாய் முதலீடு செய்து விமான உதிரிபாகங்கள் தயாரிக்க உள்ளதாகவும், இதன் மூலம் 700 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.
ஆட்டோமொபைல்
உலகின் முன்னணி பொறியியல் நிறுவனமான போஷ், மென்பொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தை கோயம்புத்தூரில் விரிவுபடுத்தவுள்ளது.
இதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் இதே துறையில் புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றைத் தொடங்கி 200 பேருக்கு வேலை தரவுள்ளது.
ஐடி துறை
சென்னையைச் சேர்ந்த கேஸ் கிராண்ட் நிறுவனம் 500 கோடி ரூபாய் செலவில் புதிய ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவை பூங்கா ஒன்றை அமைக்கவுள்ளது.
பிற முக்கிய தொழிற்சாலை விரிவாக்கங்கள்
மலபார் ஜெம்ஸ் நிறுவனம் நகை உற்பத்திக்காக 301 கோடி ரூபாய் செலவில் 2,600 பேருக்கு வேலை உருவாக்கவுள்ளது.
புள் மெஷின்ஸ் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு 323 கோடி ரூபாய் செலவிட்டு 1,200 பேருக்கு வேலைவாய்ப்புகளை தர உள்ளது.
பிரைட் டெக் ஆட்டோ நிறுவனம் மேம்பட்ட எல்.இ.டி விளக்கு உற்பத்திக்கு 210 கோடி ரூபாய் முதலீடு செய்து 500 பேருக்கு வேலை உருவாக்குகிறது.
இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கோயம்புத்தூர் வெறும் பாரம்பரிய தொழிற்சாலை நகரம் மட்டுமல்லாமல் செமிகண்டக்டர், விமானம், டிரோன், மருத்துவம், எதிர்கால கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்தொழில்நுட்பத் துறைகளின் மையமாகவும் மாறி வருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அதிகப்படியான சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் பெற உள்ளனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications