தமிழ்நாட்டின் டெக் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை, மாநிலம் முழுவதும் தினமும் புதிதாக துவங்கப்படும் புதிய அலுவலகங்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் தமிழ்நாடு டெக் துறைக்கு மிகவும் அவசியமான, மிகவும் முக்கியமான ஸ்டார்ட்அப் துறையை வலுப்படுத்த முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.
முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் ஸ்டார்ட்அப் எகோசிஸ்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அரசு நடப்பு நிதியாண்டில் கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் இரண்டு புதிய பிராந்திய ஸ்டார்ட்அப் ஹப்-களை நிறுவ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் Regional startup Hub உள்ளது.

இதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப்-களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இரண்டு உலகளாவிய ஸ்டார்ட்அப் ஒருங்கிணைப்பு மையங்களை (Global Startup Coordination Centres - GCC) 2025-ம் நிதியாண்டில் நிறுவ உள்ளதாக தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தி.ம.அன்பரசன் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் ஹப்கள் பல நகரங்களில் இருந்தாலும், சென்னை தாண்டி ஐடி துறையில் அதிகளவில் வளர்ச்சி அடைந்த நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் ஸ்டார்ட்அப் ஹப்-கள் அமைக்கப்படும் போது இதர மாவட்டத்துடன் இணைந்து சிறப்பாகச் செயல்பட முடியும்.
ஸ்டார்ட்அப்TN (StartupTN) வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பிராந்திய மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் மையங்கள் ஆரம்பக்கட்ட நிறுவனங்களுக்கான நிகழ்வுகள், மாணவர் திட்டங்கள், பிட்ச் நிகழ்வுகள் (pitch events) மற்றும் ஹேக்கத்தான் போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றன என அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (DPIIT) அங்கீகரித்த 7,700-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இவை 30 க்கும் மேற்பட்ட துறைகளில் சேவையாற்றுகின்றன. இதை தாண்டி சிறிதும் பெரிதுமாக பல ஸ்டார்ட்அப்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் டிசைன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ஹப்பில் உள்ள தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission - TANSIM) அலுவலகத்தில் ஒரு நவீன டிசைன் ஸ்டுடியோவை நிறுவுவதாகவும் அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
2026-ம் ஆண்டுக்குள் 10,000 ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவி கொடுத்து ஆதரிப்பதே மாநில அரசின் இலக்கு. 2022-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஸ்டார்ட்அப்-களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என TANSIM இன் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தெரிவித்ததை தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது கவனிக்கத்தக்கது.
Zoho, Freshworks, Uniphore மற்றும் Chargebee போன்ற பிரபலமான ஸ்டார்ட்அப்கள் தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
StartupTN திட்டத்தின் கீழ், அரசு 132 சீட் ஸ்டார்ட்அப்-களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான மானியங்களை வழங்கியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு, பட்டியல் வகுப்பு (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) சமூக தொழில்முனைவோர்களால் நடத்தப்படும் ஐந்து ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.7.5 கோடி வரையிலான பங்கு முதலீட்டை அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
தமிழ்நாடு அரசு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க SC/ST fund, TANSEED, Tamil Angels, Tanfund, Emerging Sector Startup fund போன்ற 5 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாகவே பல பிரிவுகளில், பல பிரிவினரின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது.
இதேபோல் டைடல் நியோ பார்க் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகவும், மேம்படுத்தவும் உதவி செய்து வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications