திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு ஆறு வழி விரைவுச்சாலை அமைப்பதற்காக 2019- 2020 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் சர்வே பணிகள் மற்றும் மண் பரிசோதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில், தற்போது, கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 வழிச்சாலை பணிகள் எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர். ஏற்கனவே பணிகள் தொடங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் இந்த பணிகள் அனைத்தையும் உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த ஆறு வழிச்சாலை பணி ஆனது, திருச்சி மாவட்டத்தை அடுத்த வண்ணாங்கோவிலில் இருந்து கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, சேங்கல், கரூரில் தெற்கு தேக்கம்பட்டி வழியாக கோவை மாவட்டம் சூலூர் வரை அமைக்க ஆய்வு பணிகள் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு நிலம் கையப்படுத்துவது உள்ளிட்ட எந்தவித பணிகளும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறவில்லை என்றும், இந்த பணிகள் விரைந்து நடத்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது இருக்கக்கூடிய கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக கூட இல்லை என்பதுதான் அவர்களது வருத்தம்.

இதனால் இந்த சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு ஆறு வழி விரைவுச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனவும் இதற்கான பணிகளை தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறுவழிச் சாலை பணிகள் திருச்சியிலிருந்து கோவைக்கு உருவாகும் பட்சத்தில் கோவை மாவட்டம் செல்லும் வழித்தடங்களில் எல்லாம் தொழில் நகரமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு ட்ரில்லியன் பொருளாதார கொண்ட மாநிலமாக உயர்த்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், இந்த 6 வழிச் சாலை உருவாகும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த பகுதியை அதிகம் விரும்புவார்கள் என்றும், எனவே, இது நாட்டின் முதல் மாநிலமாக தமிழகம் மாறுவதற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். எனவே, தமிழக அரசு விரைவாக, இந்த திட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications