இந்தியாவில் பெரு நகர்களான சென்னை, மும்பை, பெங்களூர் ஆகியவை மூச்சு முட்டும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில், இனி அடுத்தகட்ட விரிவாக்கத்திற்கு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களை நோக்கி அரசும், நிறுவனங்களும் படையெடுக்கத் துவங்கியுள்ளது. உதாரணமாக மகாராஷ்டிரா மாநில அரச சமீபத்தில் நவி மும்பைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் 3வது மும்பை நகரத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
அப்படித் தமிழ்நாட்டில் சென்னை தாண்டி தற்போது கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் காந்தமாக மாறி வருகிறது. இதில் முக்கியமாகக் கோயம்புத்தூர் MSME, உற்பத்தித் துறையின் ஆதிக்கம் கலைந்து ஐடி நகரமாக மாறி வருகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Protiviti என்ற கன்சல்டிங் நிறுவனம் தற்போது கோயம்புத்தூரில் புதிய அலுவலகத்தை முக்கியமான டெக் பார்க்கில் திறந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து கோயம்புத்தூர் வர முக்கியமான காரணம் பேஸ்மென்ட்.
Protiviti நிறுவனம் கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கும் TICEL பயோ டெக்னாலஜி பார்க்கில் அமைந்துள்ளது. சுமார் 13 மாடியில் அமைந்துள்ளது இந்த TICEL டெக் பார்க்கில் புதுவரவாக அமெரிக்காவின் Protiviti நிறுவனம் வந்துள்ளது. TICEL பயோ பார்க் Phase 1,2 சென்னையில் அமைந்திருக்கும் வேலையில், Phase 3 கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.
TICEL என்பது பயோடெக்னாலஜி, பார்மா, ஐடி/ஐடீஸ், பியோ-ஐடி, நேனோ டெக்னாலஜி, கமர்ஷியல் மற்றும் அலுவலகக் கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TIDCO மற்றும் TIDEL Park இணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.
Protiviti நிறுவனம் பிரபல ஹெச்ஆர் பிரிவு நிறுவனமான ராபெர்ட் ஹால்ப்-ன் கிளை நிறுவனமாகும். Protiviti தற்போது இன்டர்நல் ஆடிட், ரிஸ்க் அண்ட் கம்பிளையன்ஸ், டெக்னாலதி, பிஸ்னஸ் பிராசஸ், டேட்டா அனலிட்டிக்ஸ், பைனான்ஸ் ஆகிய பிரிவில் கன்சல்டிங் சேவையை அளிக்கிறது.
Protiviti நிறுவனம் சுமார் 27 நாடுகளில், 85 இடங்களில் அலுவலகத்தை வைத்துள்ளது. இந்தியாவில் பெங்களூர், புவனேஷ்வர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, நொய்டா, குர்கிராம் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரில் துவங்கியுள்ளது.
Protiviti போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தைத் துவங்க முக்கியமான காரணம், இந்த மாவட்டத்தில் அதிகப்படியான திறன் வாய்ந்த ஊழியர்களும், பட்டதாரிகளும் அதிகமாக இருப்பது தான். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற ஊழியர்கள் இல்லாத இடத்தில் யாராக இருந்தாலும் அலுவலகத்தைத் துவங்க மாட்டார்கள்.
கோயம்புத்தூர் புதிய நிறுவனங்கள், முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க முக்கியமான காரணம் இப்பகுதியில் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்கள் மட்டுமே. இன்றைய வர்த்தக முறையில் அனைத்தும் டெக்னாலஜி வாயிலாகச் சாத்தியம் என்பதால் திறன் வாய்ந்த ஊழியர்கள் எங்குக் கிடைத்தாலும் சரி நிறுவனங்கள் படையெடுக்கத் தயாராக உள்ளது.
கோயம்புத்தூர் இருக்கும் பேஸ்மென்ட் இதுதான், ஐடி, உற்பத்தி, கட்டுமானம், ஆராய்ச்சி உட்பட அனைத்து துறைக்கும் தேவை திறன் வாய்ந்த ஊழியர்கள் உள்ளனர். மேலும் கோயம்புத்தூரில் தற்போது ரியல் எஸ்டேட் விலை உயர் முக்கியக் காரணமும் இந்த வளர்ச்சி தான், அடுத்த 10 வருடத்திற்கு இந்த வளர்ச்சி கட்டாயம் இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications