இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் மாவட்டத்தில் முக்கியமானதாக இருக்கும் கோயம்புத்தூர்-ல் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தையும், வர்த்தகத்தையும் துவங்கியுள்ள நிலையில் முக்கிய வர்த்தக தளமாக மாறியுள்ளது.
குறிப்பாக சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் கோயம்புத்தூர்-ல் குவிந்து வரும் வேளையில் வென்சர் பண்ட் நிறுவனங்கள் கோயம்புத்தூர்-ல் அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறது.

இதன் அடிப்படையில் Java Capital என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனம் முதல் முறையாக கோயம்புத்தூர்-ல் அலுவலகத்தை துவங்கியுள்ளது. இதன் மூலம் கோவையில் சுற்றியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இனி வென்சர் கேப்பிடல் சமூகத்தில் தனி கவனத்தை பெற வாய்ப்புகள் உள்ளது.
கோவையில் அலுவலகத்தை துவங்கியது குறித்து Java Capital தனது லின்கிடுஇன் தளத்தில் செய்த பதிவின் படி கடந்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள 2ஆம் தர நகரங்களில் இருந்து வேகமாக வளர்ச்சி அடைந்து இந்தியா சந்தையிலும், வெளிநாட்டு சந்தை அளவில் வர்த்தகம் செய்ய வெளிவரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனித்துள்ளோம்.
ஸ்டார்ட்அப் என்பது நாளுக்கு நாள் சுதந்திரமாக வளர்ச்சி அடைவதை தாண்டி நாட்டின் முலைமுடுக்குகளிலும் உருவாக்க முடியும் என்பதற்கு கோயம்புத்தூர் ஒரு உதாரணம். இந்தியாவில் ஸ்டார்ட்அப் சந்தையின் 2வது இன்னிங்க்ஸ் மிகப்பெரிய அளவில் பல காரணிகளால் நம்பப்படும் காரணத்தால் வென்சர் கேப்பிடல் நிறுவனமான Java Capital தனது அலுவலகத்தை கோவையில் துவங்கியுள்ளது.

Java Capital நாட்டின் பிற பெரு நகரங்களை விடுத்து கோயம்புத்தூரில் அலுவலத்தை துவங்கினாலும், தனது முதலீட்டு கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யப்போவது இல்லை. கோயம்புத்தூரில் Java Capital நிறுவனம் SAAS, டீப் டெக், கிளைமேட் டெக் துறை சார்ந்த நிறுவனத்தில் ப்ரீ சீட் முதலீடாக செய்ய உள்ளது. பிற சீட் ஸ்டேஜ் முதலீடுகளில் முன்பு பங்குபெற்ற நிறுவனங்கள் அடிப்படையில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications