இந்தியாவின் பலப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் இன்று உலகளாவிய சந்தையில் தங்களுக்கே தனி இடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூரில் LMW Limited (முன்பு Lakshmi Machine Works Limited) என்பது இந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல் இயந்திர உற்பத்தியாளர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், உலக அளவில் முழுமையான ஸ்பின்னிங் மெஷின்களை உற்பத்தி செய்யக்கூடிய மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் 1962-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை இந்த துறையில் பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சியை கொண்டு பயணித்து வருகிறது.
LMW தனது தொடக்கத்திலிருந்தே இந்திய டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஸ்பின்னிங், டிராஃப்டிங், கார்டிங் போன்ற அனைத்து நிலைகளுக்கும் தேவையான இயந்திரங்களை வழங்கி, இந்தியாவின் டெக்ஸ்டைல் உற்பத்தி திறனை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் இயந்திரங்கள் நாட்டின் உள்ளூர் சந்தையை மட்டுமல்லாமல், ஆசியா மற்றும் கடல் கடந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சிஎன்சி இயந்திரங்களை நோக்கி புதிய பயணம்: டெக்ஸ்டைல் உற்பத்தி இயந்திரங்களை தாண்டி, LMW தங்களை மற்ற தொழில்துறைகளில் நிலைநாட்ட CNC (Computer Numerical Control) மெஷின் டூல்ஸ் துறையிலும் வளர்த்திக்கு கொண்டது. இதன் மூலம், தொழில்துறைகளுக்கே தேவையான தனிப்பயன் உற்பத்தி இயந்திரங்களை வடிவமைத்து வழங்கும் முக்கிய உற்பத்தியாளராகவும் பெயர் பெற்றுள்ளது. CNC மெஷின் டூல்ஸ் துறையில் LMW ஒரு முன்னணி நிறுவனமாக மாறியது அதன் R&D திறனை காட்டுகிறது. இந்த இயந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதால், அதனை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறனும், செயல்திறனும் அதிகரிக்கிறது.
Foundry பிரிவு: LMW-வின் Foundry பிரிவு என்பது மிகவும் உயர் தர உலோக வடிவங்களை உருவாக்கும் சிறப்பான உற்பத்தி பிரிவாகும். இவை உலகளாவிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது, LMW கைவசம் உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பான சேவைகளை வழங்கும் திறனை நிரூபிக்கிறது. இந்த பிரிவில் அதிக டன் எடையுள்ள பாகங்கள், வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இது பல்வேறு தொழில்களில் வாகனங்கள், ரயில்வே, கம்பிரஸர்கள், மெஷின் பாகங்கள் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத்தை நோக்கி - ATC மையம்: தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றமாக, LMW Advanced Technology Centre (ATC) என்ற பிரிவை நிறுவியது. இங்கு, விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உயர் துல்லிய இயந்திர பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானப் பாகங்களை உற்பத்தி செய்வது மிக நுட்பமான மற்றும் சர்வதேச தரமான தொழில்நுட்பம் தேவைப்படுகிற ஒரு துறையாகும். இந்தத் துறையில் LMW தங்கள் இடத்தைப் பிடித்திருப்பது பெருமைக்குரிய விசயமாகும்.
வாடிக்கையாளர் நம்பிக்கையை வென்ற 60-ஆண்டு பயணம்: 1962-ஆம் ஆண்டில் தொடங்கிய LMW, கடந்த 60-வது ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் பெற்று, பல்வேறு பிராண்டுகளால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் நிறுவனமாக மாறியுள்ளது. வாகனங்கள், இந்திய ரயில்வே, கம்பிரஸர்கள், தொழிற்துறை இயந்திரங்கள் என பல துறைகளில் LMW-வின் சாதனை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையை நோக்கிய வெற்றிச் சோதனை: LMW-வின் CNC மெஷின் டூல்ஸ் மற்றும் ஸ்பின்னிங் இயந்திரங்கள் உலகளாவிய சந்தைகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் சர்வதேச தரங்களுக்கு இணையாக உள்ளன. அதனால், இந்த மெஷின்கள் உயர் செயல்திறன் மற்றும் திறமையை வழங்குவதால், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கோயம்புத்தூரில் இருந்து உலகம் முழுவதும்: LMW-வின் தலைமையகம் கோயம்புத்தூரில் அமைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் உலகளவில் பரவியுள்ளன. நம்பிக்கை, தரம், வாடிக்கையாளர் திருப்தி என்பவை இந்நிறுவனத்தின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. இது தமிழ்நாட்டின் தொழிற்துறை மேம்பாட்டுக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு அளிக்கிறது.
சமூக சேவையில் அக்கறை: LMW வெறும் தொழில்துறை நிறுவனம் மட்டுமல்ல. சமூகத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கும் நிறுவனமாகவும் இருக்கிறது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற பல்வேறு CSR (Corporate Social Responsibility) திட்டங்களை LMW செயல்படுத்தி வருகிறது. இது அந்த நிறுவனத்தின் முழுமையான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. துணி இயந்திரங்களில் தொடங்கி, ஏரோஸ்பேஸ் பாகங்கள் வரை, LMW தனது வளர்ச்சியை பல துறைகளிலும் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது. இது நமது நாட்டின் தொழில்துறை ஆற்றலை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications