காயின் பேஸ் (Coinbase) என்பது உலகளவில் புகழ்பெற்ற கிரிப்டோ கரன்சி தளமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், கிரிப்டோ கரன்சி பில்லினியருமான பிரைன் ஆர்ம்ஸ்டிராங் சீனாவை சேர்ந்த ஏஞ்சலா மெங் என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். சீனாவை பூர்வீகமாகக் கொண்ட ஏஞ்சலா மெங் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சீனா சேர்ந்த தி சவுத் சைனா போஸ்ட் இதழில் செய்தியாளராக பணிபுரிந்தவர்.
அப்போது அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வீன்ஸ்டீனின் பாலியல் தொந்தரவுகள் குறித்த கட்டுரையை வெளியிட்டு அவரின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியவர் இவர். மேலும் நியூயார்க்கில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

ஏஞ்சலாவை திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரைன் ஆர்ம்ஸ்டிராங் வெளியிட்டுள்ளார். அதில் “ என்னுடைய நீண்ட கால தோழியான ஏஞ்சலா மெங்கை நான் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் இணைந்து புதிய வாழ்க்கையை கட்டமைக்க போகிறோம்” என தெரிவித்துள்ளார் . இது பிரைன் ஆர்ம்ஸ்டிராங்கின் இரண்டாவது திருமணம் என சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே ரேலன் ஷா என்ற புகழ்பெற்ற இந்தோனேசியா நடிகையை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
ரேலன் ஷா இன்ஸ்டாகிராமில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டவராக இருக்கிறார். அது மட்டும் இன்றி அவர் பல்வேறு தொழில்களையும் சொந்தமாக நடத்தி வருகிறார். பிரைன் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் ரேலன் ஷா ஆகிய இருவருக்கும் கடந்த செப்டம்பர் 2023இல் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. இருந்தாலும் இருவரும் குறுகிய காலத்திலேயே பிரிந்து விட்டனர் .
ஆனால் பிரைன் ஆர்ம்ஸ்டிராங் இதனை மறுத்து வருகிறார். ஏஞ்சலா மெங் உடனான திருமணம் தான் தன்னுடைய முதல் திருமணம் எனக் கூறி வருகிறார். ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக தன்னுடைய பணியை தொடங்கியவர் பிரைன் ஆர்ம்ஸ்டிராங்.
பின்னர் டெலாய்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவர் ஏர்பிஎன்பி நிறுவனத்தில் பணியாற்றிய போது தான் பிட்காயின்கள் குறித்து தெரிய வந்தது. எனவே அவர் வார இறுதி நாட்களில் கிரிப்டோ கரன்சிகளை வாங்குவது மற்றும் சேமித்து வைப்பது தொடர்பான மென்பொருளை உருவாக்கத் தொடங்கினார். அப்படிதான் அவர் காயின் பேஸ் என்ற மிகப்பெரிய கிரிப்டோ சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். கிரிப்டோ அடிப்படையில் செயல்பட்டு வரக்கூடிய காயின் பேஸ் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications