உலகளவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல லட்சம் முதலீட்டாளர்கள் தினமும் கிரிப்டோ சந்தைக்குள் வர்த்தகம் நிலையில் உலகளவில் இருக்கும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தையும், வர்த்தகத் தளத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது.
இதன் வாயிலாக அமெரிக்காவின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான காயின்பேஸ் இந்தியாவில் புதிதாக அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள்
கிரிப்டோ வர்த்தகச் சந்தை அரசு கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையிலும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இத்துறையில் பல நூறு தனியார் நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதற்கான தளத்தை உருவாக்கி, பல கோடி முதலீட்டாளர்களுக்கு வர்த்தகச் சேவை அளித்து வருகிறது.
அமெரிக்காவின் காயின்பேஸ்
இதன்படி அமெரிக்காவின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் காயின்பேஸ் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கவும் விரிவாக்கம் செய்யவும் உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் கனடாவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்த நிலையில் இந்தியாவில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியா அலுவலகம்
இதன் மூலம் காயின்பேஸ் இந்தியாவில் அமைக்கும் அலுவலகத்தின் மூலம் ஐடி சேவை, இன்ஜினியரிங், சாப்ட்வேர் டெவலப்மென்ட், வாடிக்கையாளர்கள் சேவை ஆகியவை பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உலகத் தரத்திற்கு இணையான இன்ஜினியரிங் திறமைகள் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காயின்பேஸ் இந்தியா
இந்தியா நீண்ட காலமாக இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி இன்னோவேஷனுக்குப் பெயர் போன நாடாக இருக்கும் காரணத்தால் காயின்பேஸ் வாயிலாகக் கிரிப்டோஎகானமியில் பல கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க இந்திய திறமைகளைப் பயன்படுத்த உள்ளோம் எனக் காயின்பேஸ் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் முதல் அலுவலகம்
காயின்பேஸ் தற்போது இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை ஹைதராபாத்தில் நிறுவ முடிவு செய்ய உள்ளது. இதேவேளையில் காயின்பேஸ் கனடா, அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications