கையில சல்லி பைசா இல்ல, 3 வருடத்தில் பல கோடிகளை அள்ளும் பிஸ்னஸ் உருவாக்கிய சுமித்..!!

சுமித் குப்தாவும் அவரது பார்ட்னருமான நீரஜ் காண்டேல்வாலும் 2018 ஆம் ஆண்டில் மும்பையில் ஒரு சிறிய பிளாட்டில் வசித்து வந்தனர்.
அவர்கள் வைத்திருந்த சேமிப்பு தொகையில் அடுத்த மூன்று மாதச் செலவுகளை மட்டுமே சமாளிக்க முடியும்.

இந்த நிலையில் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தி இந்தியாவின் முதல் கிரிப்டோ யுனிகார்னாகவும் மிகவும் மதிக்கத்தக்க கிரிப்டோகரன்ஸி தொழிலை உருவாக்கினர். யார் இவர்கள்..? இவர்கள் செய்தது என்ன..?

கையில சல்லி பைசா இல்ல, 3 வருடத்தில் பல கோடிகளை அள்ளும் பிஸ்னஸ் உருவாக்கிய சுமித்..!!

பாம்பே ஐஐடி மாணவரான சுமித் குப்தா பிடெக், எம்டெக் பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். பின்னர் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் மிகப் பெரிய சம்பளத்தில் வேலை பார்த்தார். 2014இல் பிளாக்செயின் டெக்னாலஜியின் அருமையை உணர்ந்த சுமித் குப்தா பிட்காயின் உலகளவில் பெற்றுவரும் பிரபலத்தை அறிந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து தனது நண்பர் நீரஜ் கண்டேல்வலுடன் ஆலோசனை செய்தார். காண்டேல்வால் அப்போது ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். காண்டேல்வால் அவரது குடும்பத் தொழிலில் அப்போது ஈடுபட்டிருந்தார். அவரும் குப்தாவும் 2018இல் CoinDCX என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.

CoinDCX நிறுவனத்தின் சிஇஓ குப்தா. இந்தியாவில் கிரிப்டோ மார்க்கெட்டுக்கு இருந்த ஆரம்பகால சிரமங்களை தைரியமாக எதிர்கொண்டனர். கொரோனா முடக்கத்தையும் கடந்து அவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

2021இல் அவர்களது நிறுவனத்தின் மதிப்பு 1.1 பில்லியன் டாலராக உயர்ந்தது. கிரிப்டோகரன்சி டிரேடிங்கில் ஒரு அக்ரிகேட்டராக அவர்களது நிறுவனம் மாறியது. இந்த நிறுவனத்தில் இப்போது 600க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இதைத் தொடர்ந்து 2022இல் அவர்களது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.16,000 கோடி ஆனது. கிரிப்டோகரன்சி பிசினஸில் குப்தாவின் நிறுவனம் இன்று நாட்டில் கோலோச்சியுள்ளது. அயராத உழைப்பால் இந்தச் சாதனையை சுமித் குப்தாவும், நீரஜ் காண்டேல்வாலும் செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+