இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளங்களில் ஒன்றான கோயின் டிசிஎக்ஸ் (CoinDCX) ஒரு பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் மூலம் சுமார் 44 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பீட்டின் படி சுமார் ரூ.368 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்த சைபர் தாக்குகல் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக காயின் டிசிஎக்ஸ் தரப்பில் தொடர்ந்து அப்டேட் கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இத்தளம் வாயிலாக பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்த காரணத்தால் பிரச்சனை தணிந்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம், இந்த சைபர் தாக்குதல் வாடிக்கையாளர்களின் சொத்துக்களை சேமிக்க பயன்படுத்தப்படும் வாலட்டுகளை பாதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இந்த சைபர் தாக்குதல், பார்ட்னர் எக்ஸ்சேஞ்ச் பிரிவில் லிக்விடிட்டி செய்வதற்காக அதிகப்படியாக பயன்படுத்தப்படும் ஒரு கணக்காகும். காயின் டிசிக்ஸ் நிறுவனர் சுமித் குப்தா இத்தாக்குதல் குறித்து, "இன்று, எங்கள் இன்டர்னல் ஆப்ரேஷன்களுக்காக பயன்படுத்தும் ஒரு கணக்கு ஒரு சிக்கலான சர்வர் குறைபாடு காரணமாக சைபர் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டது" என்று X தளத்தில் கூறியுள்ளார்.
மேலும் இந்த சைபர் தாக்குதல் மூலம் ஏற்பட்ட இழப்பை நிறுவனத்தின் நிதி சேமிப்பு மூலம் ஈடுசெய்யப்படும் என்றும், நிறுவனத்தில் இதற்கான போதுமான நிதி உள்ளதாகவும், இதன் மூலம் முழுமையாக ஈடு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் காயின் டிசிஎக்ஸ் நிறுவனம், இந்த தாக்குதலில் இருந்து மீண்டு வரவும், இழந்த நிதியை திரும்ப பெறவும் முன்னணி சைபர் செக்யூரிட்டி பார்னர்கள் உடன் இணைந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் குறைபாடுகளை கண்டறிந்து, நிதிகளின் எங்கு சென்றுள்ளது என்பதையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது.

இத்தகைய சைபர் தாக்குதல் முதல்முறையாக நடப்பது இல்லை, ஏனெனில் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமாக இருந்த வசிர்எக்ஸ் (WazirX) ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாட்டை சந்தித்தது.
இந்த சைபர் தாக்குதலில், ஹேக்கர்கள் தனிப்பட்ட வாலட்டுகளில் 230 மில்லியன் டாலருக்கும் அதிகமான கிரிப்டோ சொத்துக்களை திருடினர். இந்த சம்பவங்கள் கிரிப்டோ தளங்களுக்கு பெரும் ஆபத்து குறைப்பாடு இருப்பதை காட்டியது, இதை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் தாக்குதல் நடந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications