கிரிப்டோகரன்சி மசோதாவுக்கு மத்தியில் இந்தியாவில் நுழைந்த காயின்ஸ்டோர்.. மசோதா என்ன சொல்லபோகிறது?

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் குறித்த மசோதா, நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவில் தனியார் கரன்சிகளை தடை செய்வதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி பல்வேறு விதமான குழப்பமான தகவல்களுக்கு மத்தியில், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட விர்சுவல் கரன்சி எக்ஸ்சேஞ்சான காயின்ஸ்டோர் (Coinstore) இந்தியாவில் தனது செயல்பாட்டினைத் தொடங்கியுள்ளது.

காயின்ஸ்டோர் திட்டம்

காயின்ஸ்டோர் திட்டம்

முதல் கட்டமாக காயின்ஸ்டோர் தனது இணையதளம் மற்றும் ஆப்களை தொடங்கியுள்ளது. மேலும் இதனை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் விதமாக எதிர்காலத்தில் பெங்களூர், புதுடெல்லி, மும்பையில் அதனை கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் வந்துள்ளது.

பயனர்களில் இந்தியர்கள் தான் அதிகம்

பயனர்களில் இந்தியர்கள் தான் அதிகம்

இது குறித்து அந்த நிறுவனம் எங்கள் செயலியினை பயன்படுத்தும் மொத்த பயனர்களில், கால்வாசி பயனர்கள் இந்தியாவில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் தான் இந்த விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இது எங்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் காயின்ஸ்டோரின் தலைவர் சார்லஸ் டான் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிவிப்புகள் சாதகமாக இருக்கலாம்

அறிவிப்புகள் சாதகமாக இருக்கலாம்

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் மீது தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படியிருக்கும் பட்சத்தில் எப்படி இந்தியாவில் விரிவாக்கம் செய்யப்படுகின்றது என்ற கேள்விக்கும் மத்தியில் பதிலளித்துள்ள டான், கிரிப்டோகரன்சிகள் குறித்தான அறிவிப்பு சந்தைக்கு சாதகமாக இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். கிரிப்டோகரன்சி குறித்தான கட்டமைப்புக்கு அரசு சாதகமாக வெளியிடலாம் என நாங்கள் நம்புகிறோம்.

வரி அதிகரிப்பா திட்டம்

வரி அதிகரிப்பா திட்டம்

அரசு அதிக மூலதன ஆதாய வரி மற்றும் பிற வரிகள் மூலம் கிரிப்டோகரன்சிகளை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவில் இது குறித்தான அறிவிப்பும் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல பணியாளர்கள் நியமிக்க திட்டம்

பல பணியாளர்கள் நியமிக்க திட்டம்

இந்தியாவில் சுமார் 100 பணியாளர்களை நியமிக்க காயின்ஸ்டோர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணியாளார்கள் மற்றும் சந்தைப்படுத்துதல், ஆப் மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கு 20 மில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக டான் தெரிவித்துள்ளார்.

பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு

பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு

சமீபத்தில் கிராஸ்டவர்ஸ் இந்தியாவில் அதன் கிளையை தொடங்கிய நிலையில், இந்தியாவில் தற்போது காயின்ஸ்டோர் நிறுவனமும் நுழைந்துள்ளது.

 

கிரிப்டோகரன்சிகளில் அதிக மதிப்புள்ள கரன்சியான பிட்காயின், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதன் பின்னர் தான் இந்திய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.

மொத்த முதலீடுகள்

மொத்த முதலீடுகள்

இந்தியாவில் மட்டும் 15 - 20 மில்லியன் கிரிப்டோ முதலீட்டாளார்கள் உள்ளதாக தொழிற்துறை மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. மொத்தம் 5.33 பில்லியன் டாலர் முதலீடுகள் கிரிப்டோகரன்சிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காயின்ஸ்டோர் நிறுவனம் ஜப்பான், கொரியா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+