AI-ஐ நம்பினால் இதுதான் நிலை! பல ஆண்டு அனுபவம் கொண்ட IT ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் IT துறையில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இதனால் ஊழியர்கள் தாங்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு விடுவோமா என்ற பயத்தில் தான் வேலைக்கு சென்று வீடு திரும்புகின்றனர். அப்படி தான் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை ஒரு ஐடி ஊழியர் தனது ரெட்டிட் பதிவில் பகிர்ந்திருக்கிறார்.

ரெட்டிட் பயனர், தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தும் பெஞ்சில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை கவலையுடன் பகிர்ந்திருக்கிறார். இதற்கு காரணமும் அந்த நபர் AI அதிகம் நம்பியதுதான் என்று கூறப்படுகிறது.

AI-ஐ நம்பினால் இதுதான் நிலை! பல ஆண்டு அனுபவம் கொண்ட IT ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

அந்த ரெட்டிட் பயனர், தான் நிறுவனத்தில் இணைந்து 10 மாதங்கள் ஆவதாக குறிப்பிட்டு இருந்தார். அதோடு அவர் வேலைக்கு சென்ற முதல் 3 மாதத்திலேயே வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்று நிறுவனத்தின் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவர் வேலை செய்த இடமும் டாக்ஸிக்காக இருந்ததால் தான் இந்த நிறுவனத்திற்கு மாறியுள்ளார்.

Also Read

நிறுவனத்தின் எச்சரிக்கை வந்த பிறகு முழுமையாக உழைத்து B+ ரேட்டிங்கில் இருந்து A ரேட்டிங் பெற்றுள்ளார். அவருடைய அணியில் பின்னர் மற்றொரு ஊழியர் இணைந்து இருக்கிறார். அவருக்கோ பல ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கிறது. ஆனாலும் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்வதற்கு அந்த நபர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். சில நேரங்களில் தன் வேலையை முடிக்க ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தியதாகவும் அந்த ரெட்டிட் பயனர் தெரிவித்திருந்தார்.

இவருக்கு வந்த எச்சரிக்கையைப் போலவே பல ஆண்டு அனுபவம் கொண்ட ஊழியருக்கும் எச்சரிக்கை வந்துள்ளது. அப்போதும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் நிறுவனம் அனுபவம் கொண்ட அந்த ஊழியரை பெஞ்சில் வைத்துவிட்டது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வேலையை எளிதாக்குகிறது என்று சொன்னாலும்.. சில நேரங்களில் மனிதத் தலையீடும் அவசியமாகிறது. அதை ஈடு செய்ய முடியாத பட்சத்தில் நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுக்கின்றன. இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ரெட்டிட் பயனர் ஊழியர்களுக்கு ஜாப் செக்யூரிட்டி என்பது மிக மிக முக்கியம். IT துறையில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எனவே மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்! சிலர் சம்பாதித்துக் கொண்டிருப்பதால் ஐடி வேலையை மட்டுமே நம்பி இருக்கிறீர்கள். தயவு செய்து வேலையை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சேமிப்பையும், அவசரக் கால நிதியையும் கையில் வைத்திருங்கள் என்று கூறி பதிவிட்டிருந்தார். இவருடைய போஸ்டுக்கு பலரும் கமெண்ட் செய்ய தொடங்கினர்.

ஒரு பயனர் ஐடி திறன்களை வளர்த்துக் கொள்வதுடன் சேர்த்து கன்டன்ட் கிரியேஷன், வீடியோ எடிட்டிங் போன்ற சைடு பிசினஸ் ஐடியாக்களையும் தேடிக் கொள்ளுமாறு கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனரோ.. இதுதான் கார்ப்பரேட் வாழ்க்கை.. இந்த ஒரு விஷயத்தால் தான் எல்லோரும் அரசு வேலைக்கு ஆசைப்படுகின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கமெண்ட் செய்திருந்தார்.

ஐடி துறையில் AI தொழில்நுட்பம் நுழைந்த போது இனிவரும் காலங்களில் AI வசதியை சிறப்பாக பயன்படுத்தத் தெரிந்தால் தான் வேலை என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அதை பயன்படுத்துபவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் ஒரு தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதே முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+