அயர்லாந்து: அயர்லாந்து நாட்டின் பிரதமராக 37 வயதான சைமன் ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்து அமைச்சராகி தற்போது பிரதமராக உயர்ந்திருக்கிறார் சைமன் ஹாரிஸ்.
அயர்லாந்தில் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கர் கடந்த மாதம் திடீரென பதவி விலகினார். இதனை தொடர்ந்து ஃபைன் கேல் கட்சியின் புதிய தலைவராக சைமன் ஹாரிஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், நாட்டின் பிரதமரை தேர்வு செய்வது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சைமன் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் பதிவாகின. வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சைமன் ஹாரிஸ் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

தலைநகர் டூப்ளினில் உள்ள அதிபர் மாளிகையில் புதிய பிரதமராக 37 வயதே ஆன சைமன் ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். அப்போது தன் மீது நம்பிக்கை வைத்து இத்தனை பெரிய பொறுப்பை தந்த அனைவருக்கும் நன்றி என்றும், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கடமையாற்றுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விக்லோ மாவட்டத்தில் டாக்சி டிரைவருக்கு மகனாக பிறந்தவர் சைமன் ஹாரிஸ். சிறு வயதில் இருந்தே அரசியல் ஆர்வம் அதிகம் கொண்டவர். பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஜர்னலிசம் பாடப் பிரிவில் சேர்ந்தார். ஆனால் அதனை பாதியிலேயே கைவிட்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
16 வயதிலேயே ஃபைன் கேலின் இளைஞர்கள் அமைப்பில் சேர்ந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார் ஹாரிஸ். 22 வயதில் மாவட்ட கவுன்சிலராக தேர்வானார். தன்னுடைய 24 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு இவர் நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக வருகை தந்த போது நாடாளுமன்ற குழந்தை என பட்டம் தரப்பட்டது, வழக்கமாக ஒரு நாடாளுமன்றத்தில் மிக இளம் வயதில் உறுப்பினராகும் நபருக்கு இந்தப்பட்டம் சூட்டப்பட்டும் ஆங்கிலத்தில் இதனை "Baby of the Dail" என அழைக்கின்றனர்.
தன்னுடைய 27ஆவது வயதிலேயே ஜூனியர் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் . அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு சைமன் ஹாரிஸ் 2016ஆம் ஆண்டு சுகாதார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 29. சுகாதார துறை அமைச்சராக நாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கொரோனா தொற்று பரவ தொடங்கிய காலத்தில் திறம்பட செயலாற்றி நோய் பரவலை கட்டுப்படுத்தினார்.
2020ஆம் ஆண்டு உயர்கல்வி துறை அமைச்சராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக விக்லோ தொகுதியின் பிரதிநிதியாக இருக்கிறார்.இந்தியாவை பூர்வீகமாக கொண்ட லியோ வராத்கர் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலகிய போது யாருமே அந்த பொறுப்பை ஏற்க முன் வரவில்லை சைமன் ஹாரிஸ் மட்டுமே முன் வந்தார்.
சிறப்பான முறையில் திட்டமிட்டு, தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் வீட்டு மனை பிரச்னைகள், குடியேற்றக் கொள்கைகள் உள்ளிட்டவற்றை சரி செய்வேன் என சைமன் ஹாரிஸ் உறுதி அளித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications