மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான அருப் குமார் கோஷ் கோலாகாட் கிராமத்தைச் சேர்ந்தவர். கோலாகாட் சுற்றுப்பட்டு பகுதிகள் முழுக்க பூக்கள் சாகுபடிதான். மேற்கு வங்க மாநிலத்திலேயே இங்குதான் பூக்கள் அதிகளவில் விளைகின்றன.
வழக்கமான விவசாய முறைகளினால் விளைச்சல் அவ்வளவு நன்றாக இல்லையென்பதை அருப் குமார் கோஷ் கண்டறிந்தார். இதையடுத்து புதுமையான முறைகள் பற்றி அறியத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டில் தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு பூ சாகுபடி குறித்த ஆய்வில் இறங்கினார்.

அவரது குடும்பத்துக்குச் சொந்தமாக நெல் வயல் இருந்தபோதும் அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை. இதனால் கோஷ் பூ சாகுபடி நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார். அலங்காரப் பூக்களை விளைவித்து வியாபாரம் செய்தால் கொழுத்தப் பணம் கிடைக்கும் என்பதைத் தெரிந்த கொண்டார்.
இதனிடையே ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்அள குடிமல்காபூர் பூ மார்க்கெட்டில் மாதம் ரூ.3500க்கு ஒரு பூக்கடையில் வேலை பார்த்தார்.

பின்னர் அந்த வேலயை விட்டுவிட்டு சொந்த ஊரான கோலாகாட்டுக்குத் திரும்பிய கோஷ் சாமந்திப்பூ செடிகளையும் சில குரோட்டன் செடிகளையும் அக்கம்பக்கத்து நகரங்களில் சென்று விற்று வந்தார். இதில் அவருக்கு நூறு செடிகள் விற்றால் தினமும் ரூ.2000 முதல் ரூ.3000 வரை லாபம் கிடைத்தது.
இதில் கிடைத்த பணத்தை வைத்து 2011 ஆம் ஆண்டில் கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி பூ சாகுபடியை செய்தார். தொடக்கத்தில் பல சிரமங்களை சந்தித்தபோதும் கிடைத்த கொஞ்ச லாபத்தில் வியாபாரத்தை செய்து வந்தார். இந்நிலையில் தாய்லாந்துக்கு 2011இல் சென்ற கோஷ் அங்கு அதிக தரமான சாமந்தி பூ வகைகளைப் பார்த்தார். குறிப்பாக டென்னிஸ் பால் சாமந்திப் பூ.

மூன்று மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து சாமந்திப் பூ விதை தயாரிக்கும் நுணுக்கத்தை கற்றுக் கொண்டார். 2012இல் சாமந்திப் பூ வகைக்கு 25 கிராம் விதையுடன் கோலாகாட்டுக்கு கோஷ் வந்தடைந்தார்.
சாகுபடியை ஒன்றரை ஏக்கருக்கு விரிவுபடுத்திய கோஷ் அதில் பிரீமியம் சாமந்திப் பூக்களை சாகுபடி செய்தார். அறுவடை செய்த பூக்களை ஒரு கிலோ ரூ.100க்கு விற்றார். உள்ளூர் ரகத்தை விட அதிக விலை கிடைத்தது.
வியாபாரம் பெருகியதும் 13 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாமந்திப் பூ மற்றும் செடிகளை விளைவித்தார். குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தான் அவரது பிரதான மார்க்கெட்.
இதன்மூலம் அவர் வருடத்துக்கு ரூ.4 கோடி சம்பாதித்தார். 1200 கிலோ சாமந்திப் பூ விதையை ரூ.25,000க்கு விற்றார் இதன் மூலம் அவருக்கு ரூ.3 கோடி கிடைத்தது. 2.5 கோடி சாமந்திப் பூ செடிகளை தலா 40 பைசாவுக்கு விற்று அதன் மூலம் ரூ.1 கோடி சம்பாதித்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அருப் குமார் கோஷ் இன்றைக்கு கோடீஸ்வரர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications