அமெரிக்காவுக்கு பெரிய கும்பிடு.. இந்தியாவுக்கே வந்துடுங்க.. Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு..!!

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா விவகாரத்தில் இந்திய ஐடி ஊழியர்களையும் , ஐடி நிறுவனங்களையும் தொடர்ச்சியாக குறி வைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் தான் ஹெச்1பி விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டன, அதே வேளையில் விசா விண்ணப்பத்திலும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

டிரம்ப் அரசு அமைந்தது முதலே ஹெச்1பி விசாவில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஏற்கனவே இந்த விசாவில் அமெரிக்காவில் வேலை செய்து கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதன்படி மைக்ரோசாப்ட், டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்ற ஐடி ஊழியர்கள் நிரந்தரமாக வசிக்க வழி வகை செய்யும் பெர்ம் சான்றிதழுக்கும் கிரீன் கார்டுக்கும் விண்ணப்பம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பெரிய கும்பிடு.. இந்தியாவுக்கே வந்துடுங்க.. Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு..!!

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கை இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ (Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டெக்கிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்க உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். நம் பாரதத்திற்கு உங்கள் திறமையும் உழைப்பும் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைவதற்கு இந்தியர்கள் தான் பெரும்பங்காற்றியுள்ளனர், இருந்தாலும் அமெரிக்காவுக்கு தற்போது நாம் தேவைப்படாதவர்களாக மாறிவிட்டோம் என கூறியுள்ளார். கடின உழைப்பால் நீங்கள் கட்டி எழுப்பிய வாழ்க்கையை வேரோடு பிடுங்கி மற்ற இடத்திற்கு மாற்ற வேண்டிய கடினமாக காலம் வந்துவிட்டது என கூறியுள்ள அவர், சிறந்த ஒரு எதிர்காலத்திற்கான தொடக்கமாக இது இருக்கட்டும், இந்தியாவுக்கே திரும்பி வந்துவிடுங்கள், நம் பாரதத்திற்கு நீங்கள் தேவை , நம் இந்தியாவை கட்டி எழுப்பலாம் வாருங்கள் என கூறியுள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு நீண்ட காலமாகவே இந்த கருத்தினை முன் வைத்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் , டெக்கிகள் தாயகம் திரும்ப வேண்டு என தொடர்ச்சியாக கூறி வருகிறார். இந்தியாவில் தற்போது ஏராளமான திறமை வாய்ந்த இளம் தலைமுறையினர் உள்ளனர். பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தங்கி, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறன்களை கற்று தேர்ந்த இந்திய வல்லுநர்கள், அந்த அனுபவத்தை நாட்டின் இளம் தலைமுறைக்கு கடத்த வேண்டும். இது இந்தியாவின் எதிர்கால செழிப்புக்கு மிகவும் அவசியம் என ஏற்கனவே ஒரு முறை அவர் பதிவிட்டிருந்தார்.

Recommended For You

அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் சென்று வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியர்கள் தான். இதனால் தான் ஹெச்1பி விசா மற்றும் ஐடி துறை சார்ந்து அமெரிக்க அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவும் இந்திய ஐடி நிறுவனங்களையும் ஊழியர்களையும் நேரடியாக பாதிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+