அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியா அமெரிக்க உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்தியாவில் ஜவுளி, ரசாயனம், இயந்திரம் , நகை, நவரத்தின உற்பத்தியாளர்கள் இந்த 50% வரியால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகளையே மூடும் நிலைக்கு சென்றுள்ளன. இந்த சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது . அமெரிக்க வர்த்தக அமைச்சகத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் இந்தியாவிற்கு வருகை தந்தனர் .

அந்த வகையில் அடுத்த வாரம் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமைச்சர் பியூஸ் கோயல் அடுத்த வாரம் வாஷிங்டனுக்கு சென்று இந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார் . அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைக்கான தலைமை பொறுப்பாளர் பிரிண்டன் லின்ச் இந்தியாவிற்கு வந்து தொடர்ந்து 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அமைச்சர் பியூஸ் கோயலின் அமெரிக்க பயணம் அமைந்திருக்கிறது. இந்த தகவலை பிடிஐ தளம் வெளியிட்டு இருக்கிறது . இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலேயே இந்தியா அமெரிக்கா இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது .
இது தவிர அடுத்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் நியூயார்க்கில் ஐநா பொது குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார் அப்போது அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சரோடு முக்கியமான ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்து நடத்திய வர்த்தக பேச்சு வார்த்தையில் பாசிட்டிவான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
கடந்த பிப்ரவரி முதலே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமெரிக்க வேளாண் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிப்பது தொடர்பான விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்கா அரசு திடீரென இந்திய பொருட்களுக்கு முதலில் 25% வரியும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக ஒரு 25 சதவீதம் வரியையும் விதித்தது.
இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையை நின்று போனது தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது . இந்த வர்த்தகம் ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்தியாவை சேர்ந்த ஜவுளி துறை, ரசாயனத்துறை என அமெரிக்கா சந்தைக்கான ஏற்றுமதி துறையை சார்ந்து இயங்கக்கூடிய லட்சக்கணக்கான நிறுவனங்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications