இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாதந்தோறும் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து, இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.34.50 குறைக்கப்பட்டு ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீடுகளில் பயன்படுத்தும் மானிய கேஸ் சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலிண்டர்களை தினசரி பயன்படுத்தும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
ஜூலை மாத தொடக்கத்தில், சமையல் சிலிண்டரின் விலை ரூ.50-க்கு மேல் குறைக்கப்பட்டது. சென்னையில் வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,823.50ஆக குறைக்கப்பட்டது. டெல்லியில் ரூ.1723.50இல் இருந்து ரூ.1665ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1826இல் இருந்து ரூ.1769 ஆகவும் குறைக்கப்பட்டது. ஆனாலும், வீட்டு சமையல் சிலிண்டரான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் வைத்துள்ளன. அதன்படி, சென்னையில் ரூ.868.50ஆகவும், டெல்லியில் ரூ.853ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879ஆகவும், மும்பையில் ரூ.852.50ஆகவும் உள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் சராசரி விலை மற்றும் அந்நிய செலாவணி மாற்று விகிதத்தை பொருத்து, மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை மொத்த எல்பிஜியில் சுமார் 90% வீட்டு பயன்பாட்டுக்கும், 10% வணிக, தொழில்துறை மற்றும் வாகனத் துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications