மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பிப்ரவரி 1, 2025 முதல் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன. தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக LPG விலை குறைப்பு நடைபெற்றுள்ளது. இந்த விலை குறைப்பு நாட்டு மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்காமல் மறைமுகமாக பலன் அளிக்க உள்ளது இதற்கு முக்கியமாக காரணம் தற்போது குறைந்துள்ளது வர்த்தக சிலிண்டர்களின் விலை.
இன்று வெளியான அறிவிப்புகளின் படி டெல்லியில், 19 கிலோ எடையுள்ள LPG சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டு ரூ.1,797 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரூ.4 குறைப்புடன் ரூ.1,907 ஆகவும், மும்பையில் ரூ.6.50 குறைப்புடன் ரூ.1,749.50 ஆகவும், சென்னையில் ரூ.6.50 குறைப்புடன் ரூ.1,959.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2025 ஜனவரியில் விலை குறைப்பைத் தொடர்ந்து, இரண்டாவது மாதமாக பிப்ரவரியில் விலை குறைப்பு நடைபெறுகிறது. கடந்த மாத நாட்டின் முக்கிய நகரங்களில் விலை ரூ.14.5 முதல் ரூ.16 வரை குறைக்கப்பட்டது. இந்த நிலை போக்குவரத்து செலவுகள் அடிப்படையில் மாறுப்படுகிறது.
வீட்டில் சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள LPG சிலிண்டர்களின் விலைகள் 2024 ஆகஸ்ட் 1 முதல் மாறாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2025 பிப்ரவரியில், 14.2 கிலோ சிலிண்டருக்கான விலை டெல்லியில் ரூ.803, கொல்கத்தாவில் ரூ.829, மும்பையில் ரூ.802.50 மற்றும் சென்னையில் ரூ.818.50 ஆக உள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டு உள்ள விலை குறைப்பு கொஞ்சம் ஸ்பெஷல், பிப்ரவரி 1, 2025 (இன்று) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட் 2025 க்கு முன்னதாக நடைபெறுகிறது.
அரசாங்கத்தின் பட்ஜெட் அறிவிப்புகள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த LPG விலை குறைப்பு வரும் பட்ஜெட் அறிவிப்பு இதற்கு ஒரு ஆரம்பமாக இருக்கலாம். இதேபோல் இன்று பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு அதன் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications