இந்தியாவில் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றப்படுவது வழக்கம். வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் பெரும்பாலும் மாற்றப்படுவது கிடையாது. ஆனால், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் விலை அவ்வப்போது மாற்றப்படுகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
சிலிண்டர் விலையில் மாற்றம் : ஆனால், சிலிண்டர் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதாவது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில், பண்டிகைக் காலமான அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலைகள் குறித்த புதிய அறிவிப்பு இன்று (அக்டோபர் 1) வெளியிடப்பட்டுள்ளன.

6 மாதங்களுக்குப் பிறகு விலை உயர்வு : வழக்கமாக, வீட்டு உபயோகத்திற்கான 14.20 கிலோ சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் என இரு வகைகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், நுகர்வோர் மத்தியில் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வணிகச் சிலிண்டரின் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வணிகச் சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது 6 மாதங்களுக்குப் பிறகு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை நிலவரம் : சமீபத்திய அறிவிப்பின்படி, வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.16 அதிகரித்து, தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1,754 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு வணிகப் பயன்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிலவரம் : தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வீட்டு உபயோகச் சிலிண்டர் விலையாவது குறையுமா என இல்லத்தரசிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் இந்த மாதம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகச் சிலிண்டர் விலை நிலையாக தொடர்வது மக்களுக்குச் சற்று நிம்மதி அளித்தாலும், பண்டிகை காலத்தில் விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துள்ளது.
More From GoodReturns

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications