Work From Home: மாத சம்பளக்காரர்களுக்கு ரூ.1 லட்சம் வரை வரி சலுகை..?! #Budget2022

பிப்ரவரி 1 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்களுக்கு அதிகப்படியான சலுகை அளிக்கப்பட வேண்டும் எனப் பலர் பல விதமாகக் கோரிக்கை வைத்தாலும், அதை ஏன் எதற்காக எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

ஒருபக்கம் இந்திய மக்கள் கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த 2 வருடமாகப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர், வேவைவாய்ப்பு இழப்பில் துவங்கி, அதிகப்படியான மருத்துச் செலவுகள் வரையில்..

மக்களின் சுமையைக் குறைக்கக் கட்டாயம் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்களுக்குச் சாதகமான அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இது கட்டாயம் நடக்கும் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

 மாத சம்பளக்காரர்கள்

மாத சம்பளக்காரர்கள்

கொரோனா தொற்றுக் காரணமாகப் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட வேளையிலும், மாத சம்பளக்காரர்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்ந்து வருமான வரியைத் தவறாமல் அரசுக்குச் செலுத்தி வருகின்றனர். இதேவேளையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் பல வரி சலுகைகளை அறிவித்து வருகிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம்

வொர்க் ஃப்ரம் ஹோம்

இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கியுள்ளனர். இதற்கு மத்திய அரசு தொழிலாளர் சட்டத்திலும் உரிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் நிறுவனத்திற்காகக் கூடுதலாகச் செய்யப்படும் செலவுகளுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்.

செலவுகள்

செலவுகள்

வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மின்சாரம், இண்டர்நெட், ஸ்டேஷ்னரி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இதர செலவுகள் உள்ளது. இதை நிறுவனமோ அல்லது மத்திய அரசோ கண்டிப்பாக ஈடு செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்விதமான சலுகைகளும் அளிக்கப்படுவது இல்லை.

 Standard deduction பிரிவு

Standard deduction பிரிவு

இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பாதிப்பு, தனிநபர் நிவாரணம், வொர்க் ஃப்ரம் ஹோம் ஆகிய அனைத்தையும் சேர்ந்து Standard deduction பிரிவில் வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வரிச் சலுகை அளிக்க முடியும்.

 Standard deduction உயர்வு

Standard deduction உயர்வு

தற்போது மத்திய அரசு Standard deduction பிரிவில் வருமான வரி செலுத்தும் அனைத்து தனிநபர்களுக்கு 50000 ரூபாய்க்கு 100 சதவீத வருமான வரி சலுகையை அளித்து வருகிறது. இந்த அளவீட்டை 750000 ரூபாய் முதல் 100000 ரூபாய் வரையில் உயர்த்தப்படுவதன் மூலம் அனைவரும் பயன்பெற முடியும்.

 பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

2019 பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்த பியூஷ் கோயல் 40000 ரூபாயாக இருந்த Standard deduction அளவீட்டை 50000 ரூபாயாக உயர்த்தினார். கொரோனா தொற்று பாதிப்புக்கு உலக நாடுகள் தத்தம் நாட்டு மக்களுக்கு நேரடி நிதியுதவி முதல் பல சலுகைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+